பிரான்ஸ் நாட்டின் எவன் பகுதியில் உள்ள நிறுவனக் கட்டடமொன்றில் ஏற்பட்ட வெடி விபத்தில் 11 பேர் பலத்த காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

குறித்த விபத்தானது இன்று காலை இடம்பெற்றுள்ளது.

விபத்து ஏற்பட்டதையடுத்து அப் பகுதிக்கு விரைந்த தீயணைப்பு பிரிவினரும், படையினரும் காயமடைந்த 11 பேரை மீட்டு அருகில் உள்ள வைத்தியசாலையில் அனுமதித்துள்ளதுடன் மேலும், 150 பேரை கட்டடத்திலிருந்து வெளியேற்றியுமுள்ளனர்.

இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 11 பேரில் இருவரின் நிலைமை கவலைக்கிடமாகவுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இதேவேளை விபத்துக்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில் மீட்பு பணிகளையும், தீயை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.