அமெரிக்காவில் அயோவா மாநிலத்தில் கடந்த 1989 ஆம் ஆண்டு விமானம் தரையிறங்கிய வேளை விபத்துக்குள்ளான போது 184 பயணிகளின் உயிரைக்காப்பாற்றிய யுனைடெட் ஏயார்லைன்ஸ் விமானத்தின் முன்னாள் விமானி அல் ஹெய்ன்ஸ் உயிரிழந்துள்ளார்.

30 ஆண்டுகளுக்கு முன்பு அயோவாவில் விபத்துக்குள்ளான ஜெட் விமானத்திற்கு கட்டளையிட்ட பெருமை பெற்ற ஓய்வுபெற்ற யுனைடெட் ஏயார்லைன்ஸ் விமானி அல் ஹெய்ன்ஸ், 184 பயணிகள் மற்றும் பணியாளர்களின் உயிரைக் காப்பாற்றியதாக விமான நிறுவனம் தெரிவித்துள்ளது. 

ஹெய்ன்ஸ் சியாட்டில் உள்ள வைத்தியசாலையில், கடந்த திங்கட்கிழமை குறித்த விமானி உயிரழந்துள்ளார். எனினும் உயிரிழந்தமைக்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை.

கடந்த ஜூலை 19, 1989 இல் விமானத்தின் வாலில் பெருத்தப்பட்ட இயந்திரம் செயலிழந்த பின்னர் ஹெய்ன்ஸ் மற்றும் அவரது குழுவினர் சுமார் 45 நிமிடங்கள் ஆகாயத்தில் பறந்த நிலையில், விமானம் செயலிழப்பதற்கு 45  மணித்தியாலத்திற்கு பின், விமானத்தை கீழே  இறக்குவதற்கு ஹெய்ன்ஸ் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளர்களுடன் இணைந்து பணியாற்றினார்.

இறுதியில் சியோக்ஸ் நகரத்தின் விமான நிலையத்தில் விமானத்தை தரையிறக்கி ஹெய்ன்ஸ் முடிவுசெய்தார்.  இந்நிலையில், விமானம் தரையிறங்கும் போது வெடித்துச் சிதறியதில், 110 பேர் உயிரிழந்தோடு 184 பேர் உயிர் பிழைத்தமை குறிப்பிடத்தக்கது.