(நா.தனுஜா)

லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா இராணுவத் தளபதியாக நியமிக்கப்பட்டமை ஐ.நாவின் நிபுணர் குழு கூறுவது போன்று பாதிக்கப்பட்டவர்களுக்குச் செய்கின்ற அவமரியாதை அல்ல. அது அவர்களுக்குச் செலுத்துகின்ற கௌரவமாகும் என்று ரியர் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்தார்.

இறுதிப்போரில் தமிழீழ விடுதலைப் புலிகள் பொதுமக்களை மனிதக் கேடயங்களாகப் பிடித்துவைத்திருந்த போது, சவேந்திர சில்வாவே அவர்களைப் புலிகளிடமிருந்து காப்பாற்றினார். 

எனவே தமது உயிரைக் காப்பாற்றிய ஒருவர் இராணுவத் தளபதியாக வருவதை யாரும் வெறுக்க மாட்டார்கள். 

புதிய இராணுவத் தளபதியாக லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா நியமிக்கப்பட்டமை தொடர்பில் ஐ.நா நிபுணர் குழுவொன்று கவலையை வெளிப்படுத்தியதுடன், மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்களுக்கு உள்ளான ஒருவரை இராணுவத் தளபதியாக நியமித்தமையானது பாதிக்கப்பட்டவர்களுக்கான அவமதிப்பாகவும் உள்ளது என்று நேற்று வெளியிட்டிருந்த அறிக்கையொன்றில் சுட்டிக்காட்டியிருந்தது.

இது குறித்துக் கருத்து வெளியிடுகையிலேயே சரத் வீரசேகர இவ்வாறு குறிப்பிட்டார்.