(இராஜதுரை ஹஷான்)

ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் படுகொலை ஐக்கிய தேசிய கட்சிக்கு ஒரு தேர்தல் பிரச்சாரமாகும் எனத் தெரிவித்த எதிரணியின் பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே, நிரூபிக்கப்படாத குற்றச்சாட்டுக்களை எதிரணியின் மீது சுமத்தி ஐக்கிய தேசிய கட்சி  தேர்தல் பிரச்சாரத்தை ஆரம்பித்து விட்டதாகவும் கூறினார்.

ஐக்கிய தேசிய கட்சி 2015 ஆம் ஆண்டு  தேர்தல் பிரச்சாரத்திற்காக  பயன்படுத்திய  படுகொலை சம்பவங்கள் மீண்டும் உயிர்பெற தொடங்கியுள்ளது.  போலியான குற்றச்சாட்டுக்களுக்கு இம்முறை நாட்டு மக்கள் ஒருபோதும் ஏமாற மாட்டார்கள். குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் தகுந்த ஆதாரங்களை  முன்வைத்து சட்டநடவடிக்கை அரசாங்கம் மேற்கொண்டால் அதனை முழுமையாக வரவேற்போம் என்றும் அவர் கூறினார்.

எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.