ஜனாதிபதித் தேர்தலில் நீங்கள் ஏன் வாக்களிக்க வேண்டும்?

Published By: Digital Desk 3

28 Aug, 2019 | 12:25 PM
image

மிகச் சமீ­பத்தில் இலங்கை வாழ் மக்­களில் வாக்­க­ளிக்க தகு­தி­யு­டைய வாக்­கா­ளர்கள் அனை­வரும் தமது நாட்டில் எதிர்­கால ஜனாதி­ப­தியை தேர்ந்­தெ­டுப்­ப­தற்­கான வாக்­கு­ரி­மையை பிர­யோ­கிக்­க­வி­ருக்­கி­றார்கள் என்­பது நாம் அறிந்­ததே.

சிலர் இந்த வாக்­க­ளிப்பால் எமக்கு என்ன பயன். சிறையில் உள்ள எமது குழந்­தை­க­ளுக்கு விடு­தலை அளிப்­ப­தாகக் கூறியும் இன்றும் அதற்­கு­ரிய ஆயத்­தங்கள் நடை­பெ­ற­வில்லை. நாம் இழந்த எமது காணியை மீளப்­பெற முடி­ய­வில்லை என்­பன போன்ற உண்­மை­யான பிரச்­சி­னை­களைக் கூறி நாங்கள் யாருக்கும் வாக்­க­ளிக்­காமல் இருந்தால் என்ன? என்று அங்­க­லாய்த்துக் கொண்டு இருக்­கின்­றனர். இவர்­க­ளது அங்­க­லாய்ப்­புக்­கான காரணம் உண்­மை­யே­யாகும். 

ஆயினும் ஒரு விட­யத்தை அவர்கள் மறந்து விடு­கி­றார்கள். வாக்­க­ளிக்­காமல் விடு­வதால் மேற்­படி பிரச்­சி­னைகள் தீருமா? என்­பதை அவர்கள் சிந்­தித்துப் பார்க்க வேண்டும். வீட்டில், நாட்டில், உலகில் பல பிரச்­சி­னைகள் ஏற்­பட்­டுக்­கொண்டே இருக்­கின்­றன. அவற்றை தீர்ப்­ப­தற்கு அப்­பி­ரச்­சி­னை­களைப் பற்றி நாடுகள் ஒன்­று­பட்ட மனம் இல்­லா­த­போதும் தொடர்ந்தும் பிரச்­சி­னை­களைத் தீர்க்க நட­வ­டிக்கை எடுத்து வரு­கின்­றன. ஒரு பொழுதும் விரக்தி மன­நி­லையில் இருந்து வாழ்க்­கையை நடத்­தக்­கூ­டாது. 

இன்று பலர் கூறும் ஒரு விடயம் என்­ன­வெனில் ஜனாதி­பதி தேர்­த­லுக்கு வாக்­க­ளித்து நமக்கு என்ன பலன் வரப்­போ­கி­றது என்ற விரக்தி நிலையில் கேள்­வியை எழுப்­பு­வதை நாம் காணக்­கூ­டி­ய­தா­யி­ருக்­கி­றது. இந்தக் கேள்வி தனிப்­பட்ட மக்கள் மனதில் மட்­டு­மல்ல சமூ­கத்தின் மத்­தி­யிலும் உள்­ளதை நாம் காணலாம்.

உண்­மையில் அவர்கள் யோசிக்க வேண்­டி­ய­தொரு விடயம் என்­ன­வெனில் அவர்கள் ஜனாதி­பதி தேர்­த­லுக்கு வாக்­க­ளிக்­காமல் இருப்­பதால் ஜனாதி­பதி ஒருவர் தேர்ந்­தெ­டுக்­கப்­ப­டாமல் இருக்கப் போகி­றாரா? என்­ப­தே­யாகும். ஆகவே வாக்­காளர் ஒவ்­வொ­ரு­வரும் சிந்­திக்க வேண்­டிய விடயம் வாக்­க­ளிப்­பது தமது தேவை­க­ளுக்கு மட்­டு­மல்ல பிற­ரது தேவை­க­ளுக்­கா­க­வுமே என்­பதை பற்­றி­யாகும். அப்­படிச் சிந்­திக்கும் போது எமக்­காக இல்­லா­விட்­டாலும் பிற­ருக்­கா­க­வா­வது வாக்­க­ளிப்­பது அவ­சியம் என்­பது அவர்­க­ளுக்குப் புலப்­படும். தேசிய நல்­லி­ணக்கம், தேசிய ஒற்­றுமை என்­ப­தற்­கா­க­வேனும் ஜனாதி­பதி தேர்­தலில் வாக்­க­ளிக்க வேண்டும் என்ற உண்­மையை அவர்கள் உணர்வர் எனலாம். 

ஜனாதி­பதித் தேர்­தலின்  நிலைமை

ஜனாதி­பதித் தேர்­தலின் நிலை­மையை பின்­வரும் தலைப்­பு­களின் கீழ் ஆராய்­வது பலன் தரு­வ­தாக இருக்கும்.

1. ஜனாதி­பதி பத­விக்குப் போட்­டி­யிட இருக்கும் கட்­சி­களும் நிலை­மையும். 

2. சிறு­பான்மைக் கட்­சி­களும் நிலை­மையும்.

3. புதி­தாக உள்­வாங்­கப்­பட்­டுள்ள இளைஞர் யுவ­தி­களின் நிலைமை.

4. மிதக்கும் நிலையில் உள்ள வாக்­குக்­குளின் நிலைமை

ஜனாதி­பதி பத­விக்குப் போட்­டி­யிட இருக்கும் கட்­சிகள்

ஜனாதி­பதி பத­விக்குப் போட்­டி­யிட இருக்கும் பிர­தான கட்­சிகள் பல இருப்­பினும் அவற்றுள் முக்­கிய கட்­சி­க­ளாக உள்­ளவை மூன்று கட்­சி­க­ளே­யாகும். அவை­யா­வன,

1. ஐக்­கிய தேசிய கட்­சியின் தலை­மை­யி­லான கட்­சிகள்.

2. ஸ்ரீ லங்கா பொது­சன முன்­ன­ணியின் தலை­மை­யி­லான கட்­சிகள்.

3. மக்கள் விடு­தலை முன்­னணி (J.V.P) 

4. இட­து­சா­ரிகள் ஆகி­ய­னவே முக்­கிய கட்­சி­க­ளாக கள­மி­றங்கும் என எதிர்­பார்க்­கலாம்.

சில உதிரிக் கட்­சி­களும் ஜனாதி­பதி பத­விக்குப் போட்­டி­யி­டலாம். வெற்­றி­பெற மாட்டோம் என்று தெரிந்தும் வெற்றி பெறு­கிறோம் என்ற கோஷத்­துடன் இவர்­களும் கள­மி­றங்­கு­வார்கள் என எதிர்­பார்க்­கலாம். 

இவற்றுள் உண்­மை­யான போட்டி ஐக்­கிய தேசிய கட்­சியின் தலை­மை­யி­லான கட்­சி­க­ளுக்கும் ஸ்ரீ லங்கா பொது­ஜன முன்­ன­ணியின் கட்­சி­க­ளுக்கும் இடையே நடை­பெறும் போட்­டி­யே­யாகும். ஆனால் மக்கள் விடு­தலை முன்­ன­ணியின் போட்­டி­யையும் குறை­வாக மதிப்­பிட முடி­யாது. மிதக்கும் வாக்­குகள் ஆங்­கி­லத்தில் FLOATING VOTE எனலாம். கிட்­டத்­தட்ட 25% – 30% வீதத்­திற்­கு­மி­டையில் சகல தேர்­தல்­க­ளிலும் இவ்­வாக்­குக்கள் இடம்­பெ­று­வதை நாம் காணலாம். இவை மக்கள் விடு­தலை முன்­ன­ணிக்கு கிடைக்கும் பட்­சத்தில் தேர்­தலில் அக்­கட்­சியும் உய­ரிய நிலை ஒன்­றைப்­பெற இடம் ஏற்­ப­டலாம். இனி ஒவ்­வொரு கட்­சியி­னதும் நிலையைப் பார்ப்போம்.

ஐக்­கிய தேசியக் கட்­சியின் நிலைமை

சென்ற ஜனாதி­பதி தேர்­தலில் மைத்­தி­ரி­பால சிறி­சேன ஜனாதி­பதி பத­விக்­கான போட்­டிக்கு முக்­கி­யத்­துவம் அளித்து அவரை வெற்­றி­பெறச் செய்­தது ஐக்­கிய தேசியக் கட்­சியின் ஆத­ர­வா­ளர்­க­ளே­யாவார் என்­பது பற்றி இரண்டு அபிப்­பி­ரா­யத்­துக்கு இட­மில்லை. வெற்றி பெற்ற ஜனாதி­பதியே அதற்குப் பாராட்டும் தெரி­வித்திருந்தார். மாது­ளு­வாவே சோபித தேரரின் பங்கும் இக்­கட்­சிக்கே இருந்­தது. அதேபோல் முன்னாள் ஜனாதி­ப­தி­யான சந்­தி­ரிகா பண்­டா­ர­நாயக்க குமா­ர­துங்கவின் பங்­க­ளிப்பும் குறைத்து மதிப்­பிட முடி­யாமல் இருந்­தது. 

ஆனால் இந்­நி­லைமை இன்­றைய ஐக்­கிய தேசியக் கட்­சியின் தலை­மை­யி­லான அபேட்­ச­க­ருக்குக் கிடைக்­குமா? என்­பதை இன்றும் தீர்­மா­னிக்க முடி­யாமல் இருக்­கி­றது. காரணம் இக்­கட்­டுரை எழுதும் போதும் கூட ஐக்­கிய தேசியக் கட்­சியின் முன்­ன­ணியில் உள்ள கட்­சி­களின் சார்பில் யார் ஜனாதி­பதி பத­விக்கு போட்­டி­யிடப் போகிறார் என்­பது தெளி­வில்லை என்­பதும் ஒரு கார­ண­மாகும்.

மூன்று நபர்­களின் பெயர்­களே அடி­ப­டு­கின்­றன. 

1. ரணில் விக்­கி­ர­ம­சிங்க

2. சஜித் பிரே­ம­தாஸ

3. கரு ஜய­சூ­ரிய

ஆகி­யோரின் பெயர்­களே அடி­ப­டு­கின்­றன. ரணில் விக்­கி­ர­ம­சிங்க பெயர் அடி­பட்­டாலும் அவர் பத­விக்கு மிக ஆசைப்­பட்­டவர் இல்லை என்­பது அவ­ரது அர­சியல் வாழ்வில் இருந்து நாம் காணக்­கூ­டி­ய­தா­யி­ருக்­கி­றது. பீல்ட் மார்ஷல் சரத் பொன்­சேகாவுக்கும், மைத்­தி­ரி­பால சிறி­சேன ஜனாதி­பதிக்கும் தனது அபேட்­சகர் நிலையை விட்­டுக்­கொ­டுத்­ததில் இருந்து அவர் நாட்டின் நல­னையே முக்­கி­ய­மாகக் கரு­து­ப­வ­ராக இருப்­பதால் இம்­முறை கட்­டாயம் அவர் போட்­டி­யிட அடம்­பி­டிப்பார் என்று கூற முடி­யாது. கட்­சியின் தீர்­மா­னத்­திற்கு அவர் விட்டுக் கொடுப்பார். ஆகவே கட்­சி­யி­லேயே இது தங்­கி­யுள்­ளது. 

சஜித் பிரே­ம­தாஸ  ஐக்­கிய தேசியக் கட்­சியின் இளம் பாரா­ளு­மன்ற அங்­கத்­த­வர்­களின் ஆத­ரவு உள்­ள­வ­ராவார். சில தலை­வர்­களும் அவரை ஆத­ரிக்­கின்­றனர். தன்னால் எத­னையும் சாதிக்க முடியும் என்­பதை வீடு­களை நிர்­மா­ணிக்கும் பணியின் மூலம் மக்­க­ளுக்குக் காட்டி மக்­களின் ஆத­ர­வையும் பெற்­ற­வ­ரா­கிறார். அவ­ரது பெயரும் இக்­கட்­சியின் சார்பில் அடி­ப­டு­கி­றது. 

மூன்­றா­வது நப­ராக கரு ஜய­சூ­ரியவின் பெயர் அடி­ப­டு­கி­றது. கரு ஜய­சூ­ரியவின் அர­சியல் வாழ்வை நாம் ஆராய்ந்தால் அவர் எந்த பத­வி­யையும் கேட்டுப் பெற்­றவர் என்று கூற முடி­யாத ஒரு தலைவர் என்­பதைக் கண்டு கொள்­ளலாம். கொழும்பு மாந­கர சபையில் போட்­டி­யிட அவர் அழைக்­கப்­பட்டு வெற்றி பெற்றார். பின்னர் கொழும்பு நக­ரா­தி­ப­தி­யா­கவும் சேவை­யாற்­றினார். அதன்­பின்னர் கம்­பஹா மாவட்­டத்­திற்கு பாரா­ளு­மன்­றத்­திற்கு போட்­டி­யி­டு­மாறு கட்சி கட்­ட­ளை­யிட்­ட­போது அங்கும் போட்­டி­யிட்டு வெற்றி பெற்றார். இவர் எந்தப் பத­வி­யையும் கேட்டுப் பெற்­ற­தில்லை. கட்­சியே இவ­ருக்­கான பத­வியை தெரிவு செய்து அவரை நிறுத்தி வெற்றி பெறு­வதை நாம் காணலாம். 

சபா­நா­ய­க­ராக நிய­மிக்­கப்­பட்ட அவர் பாரா­ளு­மன்ற வர­லாற்றில் எந்த சபா­நா­ய­கரும் தாக்­குப்­பி­டிக்க முடி­யாத ஒரு சூழ்­நி­லையைச்  சமா­ளித்து இலங்­கையில் ஜன­நா­ய­கத்தை நிலை­நாட்டச் செய்­த­வ­ராவார். ஆகவே அவர் தோல்வி என்­பதை அறி­யா­த­வ­ரா­கிறார். இவரும் ஜனாதி­பதி பத­விக்குப் போட்­டி­யிட வேண்டும் என்று கட்­சியின் மூத்த உறுப்­பி­னர்கள் கூறு­வதால் இவரும் ஐக்­கிய தேசியக் கட்­சியின் தலை­மையில் இயங்கும் கூட்­ட­ணியின் அபேட்­ச­க­ராக போட்­டி­யிட இட­முண்டு. ஆகவே போட்­டி­யி­டு­ப­வர்கள் யார் என்­பதே ஐக்­கிய தேசியக் கட்­சியின் தலை­மையில் உள்ள கூட்டுக் கட்­சி­க­ளுக்கு உள்ள பிரச்­சி­னை­யாகும். எனவே போட்டி ஐக்­கிய தேசிய முன்­ன­ணியின் அபேட்­ச­க­ருக்கும் ஸ்ரீலங்கா பொது­சன முன்­ன­ணிக்கும் இடையே இருக்கும் என அர­சியல் நோக்­கு­நர்கள் கூறு­கின்­றனர்.

ஸ்ரீலங்கா பொது­சன முன்­ன­ணியின் நிலைமை

முதன்­மு­த­லாக ஜனாதி­பதி பத­விக்கு இக்­கட்சி இம்­முறை போட்­டி­யி­டு­கி­றது. முன்னாள் பாது­காப்பு செய­லா­ளரும் முன்னாள் ஜனாதி­பதி மஹிந்த ராஜபக் ஷ வின் சகோ­த­ர­ரு­மான கோதத்­பாய ராஜ

பக் ஷ   இக்­கட்­சியின் சார்பில் களம் இறக்­கப்­பட்­டுள்ளார். சிங்­கள பௌத்த மக்கள் மத்­தி­யிலும் இரா­ணுவ வீரர்கள் மத்­தி­யிலும் இவர் பெரிதும் வர­வேற்­கப்­ப­டு­ப­வ­ராக விளங்­கு­கிறார். இவர் செயற்றிறன் மிக்க ஒருவர் என்­பதை இலங்­கையின் உள்­நாட்டுப் போரை  முடி­விற்குக் கொண்டு வந்­ததன் மூலமும் நாடு நக­ர­வி­ருத்தி மூலம் கொழும்­பையும் ஏனைய நக­ரையும் அழ­கு­ப­டுத்­தி­யவர் என்ற புக­ழையும் பெற்­ற­வ­ரா­கிறார். இவ­ருக்கும் ஐக்­கிய தேசியக் கட்­சியின் சார்பில் களம் இறங்­கப்­படும் நப­ருக்கு இடை­யேயே ஜனாதி­பதி பத­விக்கு கடும் போட்­டி­யேற்­பட இட­முண்டு என அர­சியல் ஆய்­வா­ளர்கள் கணிப்­பி­டு­கின்­றனர்.

மக்கள் விடு­தலை முன்­ன­ணியின் நிலைமை

மக்கள் விடு­தலை முன்­னணி மிகச் சிறந்த அர­சியல் சித்­தாந்­தத்தை கொண்­ட­வர்­களை உள்­ள­டக்­கிய கட்­சி­யாகும். ஏழை மக்­களின் நல­னுக்­கா­கவும் நாட்டின் இறை­மைக்­கா­கவும் மற்றும் நாட்டின் முக்­கிய பிரச்­சி­னை­க­ளுக்­கா­கவும் போராடும் கட்சி இது­வே­யாகும். இக்­கட்சி மார்­க­ஷிய சித்­தாந்­தத்தைக் கொண்ட கட்­சி­யா­தலால் ஆன்­மீக சிந்­த­னை­யு­டை­ய­வர்­களைக் கொண்ட பெரும்­பா­லா­னோரின் ஆத­ரவைப் பெறத் தவ­றிய கட்­சி­யாக விளங்­கு­கி­றது. 

இக்­கட்­சியின் ஸ்தாப­க­ராக விளங்கும் காலம் சென்ற விஜ­ய­வீர   சிறந்த மார்க்­சீய சித்­தாந்­த­வா­தி­யாவார். இவர் ஜனாதி­பதி தேர்­தலில் போட்­டி­யிட்டு தோல்வி அடைந்­த­வ­ராவார். அதன் பின்னர் நந்­தன குண­தி­லக  போட்­டி­யிட்டு தோல்­வியைத் தழு­வினார். 5 இலட்சம் வாக்­குக்­க­ளுக்கு குறை­வான வாக்­கு­க­ளையே மக்கள் அவர்­க­ளுக்கு வழங்­கினர். 

நீண்ட இடை­வெ­ளிக்குப் பின்னர் அக்­கட்­சியின் சார்பில் இம்­முறை அநு­ர­கு­மார திசா­நா­யக்க   ஜனாதி­பதி பத­விக்கு களம் இறங்­கி­யுள்ளார்.

இக்­கட்­சியை பொறுத்­த­வ­ரையில் இளை­ஞர்கள், தொழிற்­சங்­க­வா­திகள் மற்றும் புத்­தி­ஜீ­விகள் உட்­பட சில குறித்த மக்கள் குழு­வி­னரின் ஆத­ரவு இக்­கட்­சிக்­கே­யுண்டு. யாழ் நகரில் இவர்­க­ளது போஸ்­ட­ரையே காணக்­கூ­டி­யதாய் இருக்­கி­றது. வேறு கட்­சிகள் இன்றும் தமது பலத்தை காட்டத் தொடங்­க­வில்லை. 

தற்­போது போட்­டி­யிடும் அநு­ர­கு­மார திசா­நா­யக்க  பொறி­யி­ய­லாளர் ஒரு­வ­ருக்கு தேவை­யான தகை­மை­களை கொண்­டவர் போல் உள்ளார். ஆனால் அர­சி­யலில் இவ­ருக்கு ஒரு தனி­யிடம் உள்­ள­வ­ராவார். சக­ல­ராலும் பேச்சுத் திற­மையால் கவ­ரப்­பட்­ட­வ­ராவார். ஆயின் சென்ற இரு தட­வையும் தேர்­தலில் பெற்ற வாக்­குக்­களை விட கூடு­த­லான வாக்­கு­களை இக்­கட்சி பெறும் என்­பது உண்­மை­யா­யினும் ஜனாதி­பதி தேர்­த­லுக்கு தேவை­யான 50% + 1 வாக்­கு­களைப் பெறுமா என்­பதைப் பொறுத்­தி­ருந்தே பார்க்க வேண்டும். 

ஜனாதி­பதி தேர்­தலில் சிறு­பான்மைக் கட்­சி­களின் நிலைமை

ஒவ்­வொரு தேர்­த­லிலும் சிறு­பான்மைக் கட்­சி­களின் சார்பில் ஜனாதி­பதி தேர்­தலில் யாரோ ஒருவர், இருவர் போட்­டி­யிட்டுத் தோல்­வி­ய­டை­வது வழக்கம். மிகச் சமீ­பத்தில் இலங்­கையில் ஏற்­பட்ட குழப்­ப­நிலை கார­ண­மாக சிறு­பான்மை இனக் கட்­சிகள் தம்மை சக்தி மிக்­க­வர்­க­ளாக்கிக் கொள்ளும் கொள்­கையை கடைப்­பி­டிக்க முடி­யா­த­வர்­க­ளாக இருப்­பதை நாம் காணலாம். விசே­ட­மாக தமிழ், முஸ்லிம் மக்கள் ஒன்­றி­ணைந்து இந்த ஜனாதி­பதி தேர்­தலில் யாரோ ஒரு பகு­திக்கே வாக்­க­ளிக்கப் போகின்­றனர். இதன்­மூலம் தமது பலத்தைக் காட்ட தீர்­மா­னித்­துள்­ளனர். நிச்­ச­ய­மாக அவர்­களும் பெரும்­பான்மைக் கட்­சி­யொன்றும் இணைந்து ஜனாதி­பதி தேர்­தலில் போட்­டி­யிட்டால் அவர்கள் வெற்றி பெறு­வதை யாரும் தடுக்க முடி­யாது. 

மிதக்கும் வாக்­குகள்

ஒவ்­வொரு தேர்­த­லிலும் மிதக்கும் வாக்­குகள் நூற்­றுக்கு 25% இற்கு மேல் இருப்­பதை நாம் காணக்­கூ­டி­ய­தா­யி­ருக்­கி­றது. இவ்­வாக்­குகள் தேர்­த­லுக்கு மிக நெருங்­கிய போதே அவர்கள் ஒரு கட்­சியின் பக்கம் சார்­வது வழக்கம். இம்­மு­றையும் வெல்­லக்­கூ­டி­ய­வர்கள் யார் எனப் பார்த்து அவர்கள் பக்கம் சார்­வார்கள். இவர்­களைப் போலவே அதா­வது யார் வெற்றி பெறப் போகிறார் என்­பதை இறுதி நேரம் வரையும் பொறுத்­தி­ருந்து பார்த்து விட்டு கடை­சியில் வெற்றி பெறும் நப­ருக்கு ஆத­ர­வ­ளிப்­பதே இந்த மிதக்கும் குழு­வி­னரின் செய­லாகும். இவர்­க­ளுடன் புதி­தாக வாக்கைப் பிர­யோ­கிப்­ப­வர்­க­ளுக்கும் இம்­மி­தக்கும் வாக்­கா­ளர்­க­ளுக்கும் ஒற்­றுமை உண்டு. ஆகவே இம்­முறை இவர்கள் யாருக்கு வாக்­க­ளிக்­கி­றார்­களோ அவரே பெரும்­பாலும் ஜனாதி­ப­தி­யாவார் என்­பதில் சந்­தே­க­மில்லை. 

மிதக்கும் வாக்­காளர் கவ­னிப்­பது என்ன?

நாட்டின் வேலை­யில்லாப் பிரச்­சினை, வாழ்க்கைச் செலவு, பொரு­ளா­தார கஷ்டம் என்­ப­ன­வற்றை மிதக்கும் வாக்­காளர் கவ­னத்தில் எடுப்­ப­தில்லை. அவர்கள் எதிர்­பார்ப்­பது யார் வெற்­றி­பெறப் போகி­றார்­களோ அவர்­க­ளுடன் சேரு­வ­தையே அவர்கள் விரும்­புவர். ஆகவே அவர்­க­ளது வாக்­குகள் கிட்­டத்­தட்ட 30% உண்டு. இவர்கள் எப்­பக்கம் சார்­கி­றார்­களோ அவர்­களே வெற்றி பெறுவர் எனக் கூற வேண்டும். 

ஜனாதி­பதித் தேர்­தலும் பொதுத் தேர்­தலும்

பொதுத் தேர்தல் நாடு பூரா­கவும் தேர்தல் தொகு­தி­க­ளாகப் பிரிக்­கப்­பட்டு தொகுதி ஒவ்­வொன்­றுக்கும் ஒரு அங்­கத்­த­வ­ராக 225 பேர் தேசியப் பட்­டியல் அங்­கத்­தவர் உட்­பட தெரிவு செய்­யப்­ப­டுவர். இது கட்சி ரீதி­யாக நடை­பெறும். கூடு­த­லான ஆச­னங்­களைப் பெறும் கட்சி அர­சாங்­கத்தை அமைக்கும். குறைந்­த­ளவு ஆச­னங்­களைப் பெற்ற கட்சி எதிர்க்­கட்­சி­யாக இருக்கும். ஆகவே ஒவ்­வொரு தேர்தல் தொகு­தி­யிலும் ஒரு அங்­கத்­தவர் தெரிவு செய்­யப்­ப­டுவார். அவர் அத்­தொ­குதி மக்­களின் பிர­தி­நி­தி­யாக இருப்பார். இலங்­கையின் முழு பிர­தி­நி­தி­யாக இருக்க மாட்டார். எனவே அந்த அங்­கத்­தவர் இன­ரீ­தி­யாக, மத ரீதி­யாக அல்­லது வேறு அத்­தொ­கு­தியின் நல­னுக்­காக தெரிவு செய்­யப்­ப­டு­ப­வ­ராக இருப்பார்.

ஆனால், ஜனாதி­ப­தி­யா­னவர் மேலே கூறி­ய­வாறு ஒரு தொகு­திக்கு மட்டும் ஜனாதி­ப­தி­யாக இல்­லாமல் முழு இலங்­கைக்கும் ஜனாதி­ப­தி­யா­கவே விளங்­குவார். ஆகவே இவர் இன ரீதி­யா­கவோ மத ரீதி­யா­கவோ அல்­லது அவ­ரது விசேட சேவைக்­கா­கவோ முழு இலங்­கையின் ஜனாதி­ப­தி­யாக  தெரிவு செய்­யப்­ப­டு­வ­தில்லை. ஆகவே ஜனாதி­ப­தி­யாக ஒரு­வரைத் தெரிவு செய்யும் போது ஒரு வாக்­காளர் எண்­ணு­கிற எண்­ணத்­துக்கும் தேர்தல் தொகு­தி­யொன்றின் அங்­கத்­த­வ­ராக ஒருவர் தெரிவு செய்­யப்­ப­டு­வ­தற்கும் வாக்­காளர் கவ­னிக்கும் அபேட்­ச­கரின் தகை­மைகள் வெவ்­வே­றா­ன­வை­யாகும். 

ஜனாதி­பதி தேர்­தலில் இடைத் தேர்தல் இல்லை. ஒரு­வரே இறுதி வருடம் வரையும் இருப்பார். இந்­நி­லையில் வாக்­காளர் கவ­னிக்க வேண்­டி­யது முழு நாட்­டிற்கும் பொது­வா­னவர் யார் என்­ப­தையே. இதற்கு நல்ல உதா­ர­ண­மாக இருப்­பவர் இங்­கி­லாந்தில் வின்சன்ட் சர்ச்சில் ஆவார். இவர் யுத்தத்தில் இங்கிலாந்துக்கு வெற்றியை பெற்றுக் கொடுத்த பெருமகனாவார். ஆனால் யுத்தம் முடிந்த பின்னர் பாராளு­மன்றத் தேர்தலில் தோல்வியுற்றார். யுத்தத்தில் வென்றார் என்பதற்காக எல்லாத் தேர்தலிலும் அவரை வெல்ல வைக்க வேண்டுமென்ற எண்ணம் ஆங்கிலேயரிடம் இல்லை. அதுவே ஜனநாயகப் பண்பு ஆகும்.

மிதக்கும் வாக்காளர், புதிய வாக்காளர், தொகுதி வாரியாக சிறுபான்மையினர் ஒருவரது இனம், மதம், அவர் ஆற்றிய சேவையைக் கணக்கில் எடுக்காது இறுதியில் அவரது சேவை முழு நாட்டிற்கும் பொதுவானதா? என்பதைப் பார்ப்பது இதனாலேயாகும். புதியவர்கள் புதிய பதவிக்குத் தெரிவு செய்யப்படுவது இதனாலேயேயாகும். ஆகவே இலங்கையில் நடைபெறப் போகும் ஜனாதிபதித் தேர்தல் இந்த எண்ணத்தை சித்திரிக்குமா? எனப் பார்க்க வேண்டும். அப்போது இலங்கை வாழ் மக்கள் ஜனநாயகத்தைச் சரியாக புரிந்து கொண்டார்கள் என்பது விளங்கும். 

தொகுப்புரை

இம்முறை நடைபெறப்போகும் ஜனாதி­பதித் தேர்தல் மிக முக்கியமானதாகும். நாடு மிகச் சமீபத்தில் முகம் கொடுத்த மிலேச்சத்­தனமான தாக்குதலில் இருந்து தற்போது விடுபட்டுள்ளது. முழு இலங்கையரும் இன, மத, இடம் என்பவற்றைப் பாராது இத்தாக்குதலில் இருந்து நாட்டை மீட்டெடுத்துள்ளனர். இதனைச் சாட்டாக வைத்து சிலர் தமக்கே முத்திரை குத்தப் பார்க்கின்றனர். ஆகவே வாக்காளர் அவர்களை அறிந்து தங்களது வாக்கை உபயோகிக்க வேண்டும். 

எந்த ஒரு மதத்திற்கும் இனத்திற்கும் மற்றும் ஆசாபாசங்களுக்கும் இடம் கொடுக்காத பொதுவான ஒருவரே ஜனாதி­­­­பதியாக வர வேண்டும் என எண்ணி வாக்களிக்க வேண்டும். இன சகோரத்துவமும் பொரு­­­­ளாதார அபிவிருத்தியும் முக்கியமாகக் கவனிக்கப் பட வேண்டும்.  

கே.ஜீ. ஜோன்
(சட்­டத்­த­ர­ணியும் ஆய்­வா­ளரும்)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மத்திய கிழக்கு புவிசார் அரசியலில் ஈரானின்...

2024-04-19 18:33:36
news-image

எல்லா காலத்துக்கும் மிகவும் முக்கியமான ஒரு...

2024-04-19 14:59:40
news-image

கச்சதீவை வைத்து அரசியல் செய்யாதீர்கள்

2024-04-19 14:37:29
news-image

இந்தியப் பெருங்கடலில் 'சீனா - குவாட்'...

2024-04-18 10:36:33
news-image

'ஆரம்பிக்கலாமா?' : தமிழை கையிலெடுத்துள்ள பிரதமர்...

2024-04-17 19:36:36
news-image

சர்வதேச நீதிமன்றத்தில் ஆர்மேனியா - அஸர்பைஜான்...

2024-04-17 19:37:33
news-image

சிங்களவர்களாக ஒருங்கிணையும் இந்தியத் தமிழர் –...

2024-04-17 18:00:59
news-image

பிரித்தானியாவில் ஆளுங்கட்சி தோல்வி? சொந்த தொகுதியில்...

2024-04-17 11:04:13
news-image

பரந்த கோட்பாடுகளில் இருந்து நடைமுறையில் பிரச்சினைகள்...

2024-04-16 16:00:03
news-image

ஈரானின் அதிரடி தாக்குதல் ; இஸ்ரேல்...

2024-04-16 10:56:59
news-image

ஜனாதிபதி தேர்தலில் அரசியல் கணக்குகள்

2024-04-16 01:48:16
news-image

ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தேசிய கட்சியாக...

2024-04-15 19:01:13