இந்­திய கால்­பந்து வீராங்­க­னை­க­ளுக்கு பயிற்­சி­யா­ளர்கள், நிர்­வா­கிகள் பாலியல் ரீதி­யாக தொல்லை கொடுத்­த­தாக குற்­றச்­சாட்டு எழுந்­துள்­ளது.

இதை இந்­திய மகளிர் கால்­பந்து அணியின் தலை­வி­யாக இருந்த சோனா சௌத்­தரி தற்­போது அம்­ப­லப்­ப­டுத்­தி­யுள்ளார்.

2002ஆம் ஆண்டு கால்­பந்தில் இருந்து ஓய்வு பெற்ற அவர், தான் எழு­திய “கேம் இன் கேம்” என்ற சுய­ச­ரிதை புத்­த­கத்தில் பல்­வேறு உண்­மை­களை வெட்ட வெளிச்­ச­மாக்­கி­யுள்ளார்.

அதில் அவர் கூறி­யுள்­ள­தா­வது, இந்­திய கால்­பந்து வீராங்­க­னை­களின் நிலைமை மோச­மாக உள்­ளது. அவர்கள் பயிற்­சி­யா­ளர்கள், நிர்­வா­கி­களால் உடல்­ரீ­தி­யா­கவும், மன­ரீ­தி­யா­கவும் பாதிக்­கப்­ப­டு­கின்­றனர்.

வேறி­டங்­க­ளுக்கு விளை­யாட சென்றால் பயிற்­சி­யா­ளர்­களும், நிர்­வா­கி­களும் வீராங்­க­னை­களின் அறை­க­ளிலேயே தங்­குவர்.

இது குறித்து பல முறை புகார் தெரி­வித்தும் நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­ட­வில்லை. இவர்­களின் தொல்­லை­களில் இருந்து தப்ப வீராங்­க­னைகள் நெருங்­கிய தோழிகள் போல் நடித்­தனர் என்று தெரிவித்துள்ளார்.