(எஸ்.ரவிசான்)

மஹிந்த தலைமையிலான மோசடி கும்பல்களுக்கு எவ்வித மன்னிப்பும் அரசாங்கத்தினால் வழங்கப்படமாட்டாது. தனிப்பட்ட சுயநலனுக்காக நாட்டை சீரழித்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நல்லாட்சியின் செயற்பாடுகள் தொடர்பில் இன்று எவ்வித வெட்கமும் இல்லாமல் விமர்சனங்களை தெரிவிப்பதாக நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்தார்.

மக்களுக்கு சுமையினை ஏற்படுத்தும் எந்தவொரு செயற்பாடுகளையும் நல்லாட்சி அரசானது முன்னெடுக்காது.

  மக்கள் எமது அரசிற்கு  சிறிதுகால அவகாசம் தருவார்களாயின் தற்போது எமது நாட்டின் பொருளாதார ரீதியாக காணப்படும் அனைத்து பிரச்சினைகளையும் நீக்கி நீண்டக்கால பொருளாதார ஸ்திரதன்மையினை உருவாக்கும் எனவும் உறுதியளித்தார்.