நற்காரியங்களுக்காக 99 சதவீத பேஸ்புக் பங்குகளை வழங்கவுள்ளதாக மார்க் ஜூகர்பேர்க் அறிவித்துள்ளார். அதாவது 6இலட்சத்து 42 ஆயிரத்து 690 கோடி ரூபா பெறுமதியான   45 பில்லியன் அமெரிக்க டொலர்களையே வழங்கவுள்ளார்.

பிரபல சமூக வலைதளத்தளமான பேஸ்புக் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக உள்ளவர் மார்க் ஜுகர்பேர்க் (31). இவரது மனைவி பிரிஸ்சில்லா சான், கர்ப்பமாக இருந்தார். கடந்த கிழமை அவருக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. அக்குழந்தைக்கு மஸிமா என ஜுகர்பேர்க் தம்பதியர் பெயர் சூட்டியுள்ளனர். 

இத்தகவலை ஜூகர்பேர்க்கும் அவரது மனைவி பிரிசில்லாவும் தங்களது பேஸ்புக் பக்கத்தில் அறிவித்துள்ளனர். 

மேலும் தங்களது குழந்தையின் புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளனர். இருவரும் இணைந்து பேஸ்புக்கில் வெளியிட்டுள்ள தகவலில்,

  45 பில்லியன் அமெரிக்க டொலர்கள் மதிப்பிலான ( 6426900000000 ரூபா) மதிப்பிலான பேஸ்புக் நிறுவனத்தின் 99 சதவிவீத பங்குகளை உலக மக்களின் மகிழ்ச்சிக்கும், சுகாதாரமான வாழ்க்கைக்கும் உதவும் வகையில் தானமக வழங்க இருப்பதாக அறிவித்துள்ளனர். 

தனது மகள் மஸிமா மற்றும் பிற குழந்தைகளுக்கான சிறந்த உலகை உருவாக்குவதற்காக தனது செல்வம் முழுவதையும் தருவதாகவும் இந்த தம்பதியர் உறுதியளித்துள்ளனர்.