அமெரிக்காவின் நியூயார்க்கில் நடந்து வரும் யு.எஸ். ஓபன் டென்னிஸ் போட்டியில் மகளிர் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் ரஷ்ய வீராங்கனை மரிய ஷரபோவாவை முதல் சுற்றிலேயே அமெரிக்க வீராங்கனை செரினா வில்லியம்ஸ் வெளியேற்றியுள்ளார்.

கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி கடந்த 19 ஆம் திகதி ஆரம்பமாகி நடைபெற்று வருகிறது. 

இதில் நேற்றைய தினம் இடம்பெற்ற மகளிர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்று ஆட்டத்தில் ரஷ்ய வீராங்கனை மரியா ஷரபோவாவை எதிர்கொண்டார் அமெரிக்காவின் நம்பர் ஒன் வீராங்கனையும், தரவரிசையில் 8-ம் இடத்தில் உள்ள செரீனா வில்லியம்ஸ்.

59 நிமிடங்கள் மட்டுமே நடந்த இந்த ஆட்டத்தில் மரியா ஷரபோவாவை 6-1, 6-1 என்ற நேர் செட்களில் எளிதாகத் தோற்கடித்து முதல் சுற்றிலேயே வெளியேற்றினார் செரீனா வில்லியம்ஸ்.