திருகோணமலை-வான்எல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் பேஸ்புக் மூலம் காதலித்து வந்த இளைஞரொருவர் தமது பேஸ்புக் காதலி அனுப்பிய குறுந்தகவல் காரணமாக தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த சம்பவம் நேற்றிரவு (26) இடம்பெற்றுள்ளதாக வான் எல பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு தூக்கில் தொங்கி உயிரிழந்த இளைஞன் அதே பகுதியைச் சேர்ந்த 18 வயதான என். டபிள்யூ. அமில நிரோசன் எனவும் பொலிஸார் தெரிவித்தனர். 

சம்பவம் குறித்து தெரியவருவதாவது பேஸ்புக் மூலமாக நுவரெலியா பகுதியைச் சேர்ந்த யுவதி ஒருவரை காதலித்து வந்த நிலையில், குறித்த யுவதி  குறுந்தகவல் (எஸ்.எம்.எஸ்.)மூலமாக  தகவல்களை பரிமாறிக் கொண்டிருந்த நிலையில் நேற்றிரவு குறுந்தகவல் மூலமாக ஏற்பட்ட வாக்குவாதத்தில் குறித்த  இளைஞன் தூங்கிக்கொண்டிருந்த அறைக்குள் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

உயிரிழந்த இளைஞனின் சடலம் சட்ட வைத்திய பரிசோதனைக்காக கந்தளாய் அரச வைத்திய சாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை கந்தளாய் வான் எல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்