பிரதமர் ரணில் விக்ரமசிங்க எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 2 ஆம் திகதி மாலைத்தீவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளார்.

மாலைத்தீவு ஜனாதிபதியின் அழைப்பினை ஏற்றே பிரதமர் இந்த விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார்.

இந்த விஜயத்தின் போது பல்துறைசார் இரு தரப்பு உறவுகள் மற்றும் பூகோள, பிராந்திர விடயங்களில் ஒன்றிணைந்து செயற்படுதல் உள்ளிட்ட பல முக்கிய விடயங்கள் குறித்து கவனத்தில் கொள்ளப்பட உள்ளதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

மாலைத்தீவு - பெரடைஸ் ஹோட்டலில்  இடம்பெறவுள்ள  2019 - இந்து சமுத்திர  இரு நாள்  மாநாட்டிற்கு பிதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமை வகிக்கவுள்ளார். 

இந்திய மன்றத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த மாநாட்டிற்கு மலைத்தீவு  அரசாங்கம்  மற்றும்  சிங்கப்பூரில் அமைந்துள்ள சர்வதேச கற்கைகளுக்கான எஸ்.ராஜரட்ணம் நிலையம் ஒத்துழைப்புகளை வழங்கியுள்ளது.