வடக்கு-கிழக்கில் உள்ள 8 மாவட்டங்களையும் உள்ளடக்கி குறித்த ஓமந்தையில் எதிர்வரும் 30 ஆம் திகதி முன்னெடுக்கப்படவுள்ள காணாமல் ஆக்கப்பட்டவர்களை கண்டு பிடித்துத் தரக்கோரி முன்னெடுக்கப் படவுள்ள போராட்டத்திற்கு அனைத்து தரப்பினரையும் ஆதரவு வழங்குமாறு மன்னார் மாவட்ட காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளைத் தேடும் சங்கத்தின் தலைவி மனுவல் உதையச்சந்திரா தெரிவித்தார்.
மன்னாரில் இன்று செவ்வாய்க்கிழமை (27) மதியம் இடம் பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் வேண்டு கோள் விடுத்தார்.
அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
எதிர்வரும் 30 ஆம் திகதி வெள்ளிக்கிழமை வடக்கு கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் இணைந்து ஓமந்தையில் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுக்கவுள்ளோம்.
வடக்கு-கிழக்கில் உள்ள 8 மாவட்டங்களையும் உள்ளடக்கி குறித்த போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. 5 மாவட்ட மக்கள் ஓமந்தையிலும் 3 மாவட்ட மக்கள் கல்முனையிலும் குறித்த போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM