பங்களாதேஷில் பல்வேறு மாவட்டங்களில் மின்னலின் தாக்கத்தால்  29 பேர் ஒரே நாளில் பலியாகியுள்ளனர்.

சிரஜ்காஞ்ச் மாவட்டத்தில் 5 பேரும், பாப்னா, கிஷோர்காஞ்ச், பிரக்மன்பர்கியா ஆகிய மாவட்டங்களில் 4 பேரும்,ராஜ்ஷாகி,காஜிபூர், போக்ரா மற்றும் நாட்டோர் ஆகிய மாவட்டங்களில் தலா இரண்டு பேரும் உயிரிழந்துள்ளனர். 

டாக்காவின் கால்பந்து விளையாடிக் கொண்டிருந்த  இரண்டு குழந்தைகளும் மின்னல் தாக்கியதில் பலியாகியுள்ளனர்.

மேலும், மின்னல் தாக்கியதில் காயமடைந்த மூன்று சிறுவர்களுக்கு டாக்கா மருத்துவ கல்லூரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் தங்களது வயல்களில் விவசாய வேலைகளை செய்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.