(செ.தேன்மொழி)

களுத்துறை, பதுரலிய பகுதியில் கூரிய ஆயுத்தால் தாக்கப்பட்டு ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்தது. 

நேற்று மாலை 4 மணியளவில் கூரிய ஆயுதத்தால் தாக்கி ஒருவர் கொலைச் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற தகவலுக்கமைய பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

பன்தொல -கெலின்கந்த பகுதியைச் சேர்ந்த 72 வயதுடைய மஹாகுமாரகே பிரேமதாச என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் அடையாளம் கண்டுள்ளனர்.

உயிரிழந்த நபருக்கும் பிரிதொரு நபரக்குமிடையில் ஏற்பட்டிருந்த வாக்குவாதம் மோதலாக மாறிய போதே இந்த உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் அதே பகுதியைச் சேர்ந்த 59 வயதுடைய சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பதுரலிய பொலிஸார் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.