சம்மாந்துறை கோரைக்கல் கிராம அம்மன் கோவிலை சேதப்படுத்தியோர் யார்?

Published By: MD.Lucias

13 May, 2016 | 03:20 PM
image

சம்மாந்துறை பிரதேச செயலக பிரிவுக்குள் வரும் கோரைக்கல் கிராமத்தை சேர்ந்த அகோர மாரியம்மன் ஆலயம் மற்றும் அருகில் உள்ள பிள்ளையார் கோவில் ஆகியவற்றை நேற்று இரவு சேதமாக்கியுள்ளோர் எவர் என்பதை உடன் கண்டு பிடித்து நடவடிக்கை எடுத்து அறிவிக்கும்படி சம்மாந்துறை பொலிஸ் பொறுப்பதிகாரி உபுல் பிரியலால் மற்றும் இந்த பொலிஸ் பிரிவுக்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் டி.ஆர்.ரணவீர ஆகியோருக்கு தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவரும், தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சருமான மனோ கணேசன் பணிப்புரை விடுத்துள்ளார்.  

இது தொடர்பில் அமைச்சர் மனோ கணேசன் கூறியுள்ளதாவது,

எனது கவனத்துக்கு சம்பந்தப்பட்ட பிரதேச மக்களால் இச்சம்பவம் கொண்டு வரப்பட்டுள்ளது. கடந்த காலங்களில் மத நிறுவனங்கள் மீது நிகழ்த்தப்பட்ட தாக்குதல்கள் இந்த சம்பவம் மூலம் தொடர கூடாது என்பதில் நான் கவனமாக உள்ளேன்.  பல மதத்தவர், பல இனத்தவர் வாழும் இந்த பிரதேசத்தில் இப்படியான சம்பவங்கள் நடப்பது தேவையற்ற பதட்ட நிலைமையை உருவாக்கி தேசிய சகவாழ்வுக்கு பாதகமாக அமையும் என்பதால், இச்சம்பவம் தொடர்பாக குற்றவாளிகளை விரைந்து அடையாளம் கண்டு உடன் சட்ட நடவடிக்கை எடுக்கும்படி பொலிஸ் அதிகாரிகளுக்கு பணித்துள்ளேன். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கல்வி நிர்வாக சேவைக்கான பரீட்சை முடிவுகள்...

2024-04-19 13:53:47
news-image

நாட்டில் வைத்தியர்களுக்குப் பற்றாக்குறை!

2024-04-19 13:04:56
news-image

வரலாறு : கச்சதீவு யாருக்கு சொந்தம்...

2024-04-19 13:12:49
news-image

கொழும்பில் சட்டவிரோதமாக நிர்மாணிக்கப்பட்ட கட்டிடங்கள் தொடர்பில்...

2024-04-19 12:39:54
news-image

பாதாள உலக குழுக்களைச் சேர்ந்த மேலும்...

2024-04-19 12:26:04
news-image

கலால் திணைக்களத்தின் அதிகாரி பணி இடைநிறுத்தம்!

2024-04-19 12:49:10
news-image

அநுர, சஜித் சிறு பிள்ளைகள், நாட்டைக்...

2024-04-19 12:12:49
news-image

நச்சுத்தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 10 பெண்கள் உட்பட...

2024-04-19 12:10:56
news-image

செவ்வாய் கிரகத்தில் வாழ்வது எப்படி :...

2024-04-19 12:31:10
news-image

கடுகண்ணாவை நகரை சுற்றுலாத் தலமாக அபிவிருத்தி...

2024-04-19 11:42:14
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு 71 வயதான...

2024-04-19 11:48:31
news-image

பிரிட்டிஸ் சிறுவர்களிற்கு வழங்கும் அதேபாதுகாப்பை டியாகோர்கார்சியாவில்...

2024-04-19 11:32:34