அனைத்து விகாரைகளுக்கும் அறநெறி மண்டபங்கள்: மக்களுக்கு வாக்குறுதி அளித்த சஜித்..!

Published By: J.G.Stephan

27 Aug, 2019 | 10:52 AM
image

நாட்டெங்கும் அறநெறிப் பாடசாலைகளுக்கான மண்டப வசதிகள் இல்லாத அனைத்து விகாரைகளுக்கும் நவம்பர் மாதத்தில் அறநெறி மண்டபங்களை அமைத்துக் கொடுக்க தான் மக்களுக்கு வாக்குறுதி அளிப்பதாக அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

திம்புலாகல, மஹஉலபத, ஸ்ரீ சுதர்சனாராம விகாரையின் அறநெறிப் பாடசாலை கட்டிடத்தை மாணவர்களின் பாவனைக்காக கையளிக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார் .

மக்களின் சரியான தீர்வின் பின்னர், ஐந்து வருடங்களுக்குள் இந்தச் செயற்திட்டம் பூர்த்தி செய்யப்படும். எதிர்காலத்தில் மரங்களுக்கு கீழ் அறநெறிக் கல்வி வழங்கப்பட மாட்டாது. 'சிசு தஹம் செவன' என்ற மாணவர் அறநெறி நிழல் நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் நிரந்தர மண்டபமொன்றில் அறநெறிக் கல்வியை வழங்கும் நடவடிக்கை ஏற்கெனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்ச்சித் திட்டத்திற்காக 4 ஆயிரம் மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், நவம்பர் மாதம் நாட்டின் அரசியல் துறையில் பாரிய சமூகப் புரட்சி உருவாகவுள்ளது, அந்த சரியான தீர்மானத்தின் பின்னர் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் அறநெறிக் கல்வியைப் பயிலும் மாணவர்களுக்கு பகல் உணவையும், சீருடையையும் வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் எனவும் அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதிக்கு கிடைக்கப் பெறும் எந்தவொரு வரப்பிரசாதமும் தனக்கு அவசியமில்லை எனவும் அவர் இதன்போது குறிப்பிட்டுள்ளார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22