பாராளுமன்ற உறுப்பினர் காணி சுவீகரித்துள்ளமை உறுதிப்படுத்தப்பட்டது. மாவட்ட அரசாங்க அதிபர் ஒப்பமிட்ட கடிதத்தில் இது உறுதி செய்யப்பட்டுள்ளது. எனினும் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை பயன்படுத்தி காடு அழிக்கப்படவில்லை என விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக அக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர் எவ்வாறு காணியை சுவீகரித்தார் என்பதற்கு அப்பால், சுவீகரிக்கப்பட்ட காணியை அரசு மீள பெற்றுக்கொள்ள எவ்வாறு நடவடிக்கை மேற்கொள்ளப்போகிறது என்பது தொடர்பில் பிரதேச மக்கள் கேள்வி எழுப்புகின்றனர். 

இவர் பதவியில் இருந்த காலத்தில் சுவீகரித்த காணியை 18 வயதான அவரின் மகனின் பெயரில் பதிவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டதாகவும், அது தடுக்கப்பட்டதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் சிவமோகன் அண்மையில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்புக்களில் தெளிவுபடுத்தியிருந்தமை குறிப்பிடதக்கதாகும்

இந்நிலையில் குறித்த பாராளுமன்ற உறுப்பினரால் சுவீகரிக்கப்பட்ட காணியை அரசு மீள பெற வேண்டும் எனவும், அல்லது காணி அற்ற ஏழை குடும்பங்களுக்கு பகிர்ந்தளிக்க வேண்டும் எனவும் கோரும் மக்கள் வன அழிப்பில் அழிவுக்குள்ளான பெறுமதி மிக்க தாவரங்களிற்கான நட்ட ஈட்டினை பெற்றுக்கொள்ள வேண்டும் எனவும் மக்கள் கோருகின்றனர்.