(செ.தேன்மொழி)

பகிடிவதை செய்தமை தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள றுகுணு பல்கலைக்கழக மாணவர் சங்கத்தின் தலைவர் உட்பட 19 மாணவர்களினதும் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது. 

அதன்படி அவர்களை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 9 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு மாத்தறை நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள றுகுணு பல்கலைக்கழக மாணவர்கள் இன்று மாத்தறை நீதிவான் நீதிமன்ற பதில் நீதிவான் ஆரியசேன பனங்கல முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட போதே மேற்கண்டவாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.