இலங்கையை வீழ்த்தி தொடரை சமப்படுத்திய நியூஸிலாந்து

Published By: Vishnu

26 Aug, 2019 | 07:07 PM
image

இலங்கைக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் நியூஸிலாந்து அணி இன்னிங்ஸ் மற்றும் 65 ஓட்டத்தினால் வெற்றிபெற்றுள்ளது.

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள நியூஸிலாந்து கிரிக்கெட் அணியானது இலங்கை கிரிக்கெட் அணியுடன் 2 டெஸ்ட், 3 இருபதுக்கு - 20 சர்வதேச கிரக்கெட் போட்டிகளில் விளையாடி வருகிறது.

இதில் முதலில் ஆரம்பமான டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் இலங்கை அணி 6 விக்கெட்டுக்களினால் வெற்றிபெற்றிருந்தது. இந் நிலையில் இவ்விரு அணிகளுக்கிடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி கடந்த 22 ஆம் திகதி கொழும்பு, சரவணமுத்து மைதானத்தில் ஆரம்பமானது.

சீரற்ற காலநிலைக்கு மத்தியில் ஆரம்பமான இப் போட்டியில் இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாடி முதல் இன்னிங்ஸுக்காக 90.2 ஓவர்களை எதிர்கொண்டு அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து, 244 ஓட்டங்களை பெற்றது.

இலங்கை அணி சார்பில் தனஞ்சய டிசில்வா 109 ஓட்டத்தையும், அணித் தலைவர் திமுத் கருணாரத்ன 65 ஓட்டத்தையும் அதிகபடியாக பெற்றனர். பந்து வீச்சில் நியூஸிலாந்து அணிசார்பில் டிரெண்ட் போல்ட் 3 விக்கெட்டுக்களையும், டிம் சவுதி 4 விக்கெட்டுக்களையும், கிரேண்ட் ஹோம், வில்லியம் சோமர்வில் மற்றும் அஜஸ் படேல் ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டுக்களை வீழ்த்தியிருந்தனர்.

இதன் பின்னர் நேற்றுமுன்தினம் தனது முதல் இன்னிங்ஸை ஆரம்பித்த நியூஸிலாந்து அணி மூன்றாம் நாள் நிறைவில் 62 ஓவர்களுக்கு 4 விக்கெட்டுக்களை இழந்து 196 ஓட்டங்களை பெற்றது.

இதனால் இலங்கை அணியை விட 48 ஓட்டத்தினால் நியூஸிலாந்து பின் தங்கியிருந்தது.

இதன் பின்னர் நேற்றைய நான்காம் நாள் ஆட்டத்தை 196 ஓட்டத்துடன் ஆரம்பித்த நியூஸிலாந்து அணி நான்காம் நாள் ஆட்ட நேர நிறைவில் 5 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து 382 ஓட்டங்களை குவித்துள்ளது.

இதன் மூலம் நியூஸிலாந்து அணி இலங்கை அணியை விட 138 ஓட்டத்தினால் முன்னிலையிலிருந்தது.

நியூஸிலாந்து அணி சார்பில் ஜீத் ராவல் டக்கவுட்டுடனும், டோம் லெதம் சிறப்பாக துடுப்பெடுத்தாடி 154 ஓட்டத்துடனும், கேன் வில்லியம்சன் 20 ஓட்டத்துடனும், ரோஸ் டெய்லர் 23 ஓட்டத்துடனும், ஹென்றி நிக்கோலஷ் 15 ஓட்டத்துடனும் ஆட்டமிழந்ததுடன், பி.ஜே. வோட்லிங் 81 ஓட்டத்துடனும், கிராண்ட்ஹோம் 83 ஓட்டத்துடனும் ஆட்டமிழக்காதிருந்தனர்.

இந் நிலையில் போட்டியின் இறுதியும் ஐந்தாம் நாளான இன்று 382 ஓட்டத்துடன் முதல் இன்னிங்ஸை தொடர்ந்த நியூஸிலாந்து அணி 115 ஓவர்களுக்கு 6 விக்கெட்டுக்களை இழந்து 431 ஓட்டங்களை பெற்றதுடன் ஆட்டத்தை இடைநிறுத்தியது.

இதனால் நியூஸிலாந்து அணி 187 ஓட்டத்தினால் முன்னிலை பெற்றது. இன்னிங்ஸ் தோல்வியை தவிர்க்கவும் இரண்டாவது இன்னிங்ஸுக்காகவும் பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணியினர் நியூஸிலாந்து அணியினரின் பந்து வீச்சுகளில் ஓவரை மாத்தரம் எதிர்கொண்டு அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 122 ஓட்டங்களை மாத்திரம் பெற்றனர்.

இலங்கை அணி சார்பில் நிரோஷன் திக்வெல்ல 51 ஓட்டத்தையும், திமுத் கருணாரத்ன 21 ஓட்டத்தையும், குசல் மெண்டீஸ் 20 ஓட்டத்தையும் பெற ஏனைய வீரர்கள் அனைவரும் சொப்ப ஓட்டத்துக்குள் ஆட்டமிந்தனர்.

பந்து வீச்சில் நியூஸிலாந்து அணி சார்பில் டிரெண்ட் போல்ட், டிம் சவுதி, வில்லியம் சோமர்வில் மற்றும் அஜஸ் படேல் ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்களையும், கிரேண்ட்ஹோம் ஒரு விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இதன் மூலம் நியூஸிலாந்து அணி இன்னிங்ஸ் மற்றும் 65 ஓட்டத்தினால் வெற்றிபெற்று, மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 1:1 என்ற கணக்கில் சமப்படுத்தியுள்ளது.

இவ்விரு அணிகளுக்கிடையேயான மூன்று போட்டிகள் கொண்ட இருபதுக்கு -20 தொடரின் முதல் போட்டி எதிர்வரும் செப்டெம்பர் மாதம் முதலாம் திகதி கண்டி, பல்லேகல மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

எஸ்.எஸ்.சி.யின் 125 வருட கொண்டாட்ட விழா...

2024-03-28 13:22:56
news-image

பங்களாதேஷுடனான 2ஆவது டெஸ்ட்: உபாதைக்குள்ளான ராஜித்தவுக்குப்...

2024-03-28 13:22:16
news-image

19இன் கீழ் மகளிர் மும்முனை கிரிக்கெட்...

2024-03-28 00:56:33
news-image

சாதனைகள் படைக்கப்பட்ட ஐபிஎல் போட்டியில் மும்பையை...

2024-03-28 00:04:56
news-image

சில்ஹெட் டெஸ்டில் தலா 2 சதங்கள்...

2024-03-27 22:22:22
news-image

இலங்கையில் மகளிர் ரி20 ஆசிய கிண்ண...

2024-03-27 22:09:33
news-image

குஜராத்தை வீழ்த்தி இரண்டாவது நேரடி வெற்றியை...

2024-03-27 01:34:06
news-image

ஐ.பி.எல் 2024 : குஜராத் டைட்டன்ஸ்...

2024-03-26 23:43:35
news-image

ஸ்ரீ லயன்ஸ் அழைப்பு வலைபந்தாட்டப் போட்டியில்...

2024-03-26 19:25:58
news-image

பூட்டானை வீழ்த்தியது இலங்கை : கால்பந்தாட்டத்திலிருந்து...

2024-03-26 16:48:31
news-image

சீன கால்பந்தாட்டச் சங்கத்தின் முன்னாள் தலைவருக்கு...

2024-03-26 11:53:22
news-image

ஐ.பி.எல் 2024 : பஞ்சாப் கிங்ஸை...

2024-03-26 00:02:20