தஞ்சாவூரில் 500 போலி வாக்குப்பதிவு இயந்திரங்கள் பறிமுதல்.!

By Robert

13 May, 2016 | 12:42 PM
image

தஞ்சாவூரில் 500 போலி வாக்குப்பதிவு இயந்திரங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

தஞ்சையை அடுத்த பாபநாசத்தின் பூண்டி என்ற பகுதியில் நடந்த சோதனையில் 500 போலி வாக்குப்பதிவு இயந்திரங்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தமை கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து அவற்றை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.

சேலத்தில் இருந்து வந்து கொண்டிருந்த வாகனத்தை பாபநாசத்தில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனை நடத்திய போது, வாகனத்தில் ஏராளமான போலி வாக்குப்பதிவு இயந்திரங்கள் இருந்ததைப் பார்த்து அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக அவை பறிமுதல் செய்யப் பட்டு, பாபநாசம் அரச அலுவலகத்தில் ஒப்படைக் கப்பட்டுள்ளன.

இது தொடர்பாக வாகன சாரதி உட்பட இருவரை கைது செய்துள்ளதோடு, குறித்த வாகனத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right