(எம்.மனோசித்ரா)

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்கும் பாராளுமன்ற தெரிவுக்குழுவில் ஜனாதிபதி சாட்சியமளித்தன் பின்னரே இறுதி அறிக்கை தயாரிக்கப்படும் என தெரிவித்த பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா , தற்போது இடம்பெறுகின்ற கைதுகளின் அடிப்படையில் பயங்கரவாதிகளின் நடமாட்டம் இன்னும் காணப்படுவதாகவே உள்ளது எனவும் குறிப்பிட்டார்.

கிரிபத்கொட பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.