27,000 சதுர அடி பரப்பளவான இராட்சத கொடியை உருவாக்கி சாதனை..!

Published By: J.G.Stephan

26 Aug, 2019 | 12:37 PM
image

ரஷ்­யாவின் தேசிய கொடி தினத்­தை­யொட்டி  சிறிய நகர சபை­களை உள்­ள­டக்கி ரஷ்யாவின் பல்­வேறு பிராந்­தி­யங்­க­ளி­லி­ருந்­து­மான 2,000 வெவ்­வேறு கொடி­களை ஒன்­றி­ணைத்து 27,000 சதுர அடி பரப்­ப­ள­வான  இராட்­சத கொடியை உரு­வாக்கி  மொஸ்கோ நகரைச் சேர்ந்த குழு­வொன்று  சாதனை படைத்­துள்­ளது.

மேற்­படி கொடி­யா­னது அந்தக் குழு­வி ­னரால் பரொஸ்பெக்ட் சக­ரோவா வீதி வழி­யாக ஊர்­வ­ல­மாக கொண்டு செல்­லப்­பட்­டது.

தேசிய ஐக்­கி­யத்தின் அடை­யா­ள­மாக இந்தக் கொடியை உரு­வாக்­கி­யுள்­ள­தாக அந்தக் குழு­வினர் கூறு­கின்­றனர்.  

மொஸ்­கோவில் தேசிய கொடி தினத்தை யொட்டி கடந்த வியா­ழக்­கி­ழமை முதல் நேற்று ஞாயிற்­றுக்­கி­ழமை வரை பல்­வேறு வைப­வங்கள் நடத்­தப்­பட்­டமை குறிப்­பி­டத்­தக்­கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right