கம்பளை  - அங்குனாவல பகுதியில் மோட்டார் கார் ஒன்று 300 அடி பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 3 பேர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சம்பவத்தில் 45 வயதுடைய பெண் ஒருவரே உயிரிழந்துள்ளார்.

சம்பவத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேரே காயமடைந்துள்ளனர்.

பொலிஸார் விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.