ஆஸி.யின் வெற்றியை தட்டிப் பறித்த பென் ஸ்டோக்ஸ்

Published By: Vishnu

25 Aug, 2019 | 09:10 PM
image

பென் ஸ்டோக்கின் பொறுப்பான மற்றும் அதிரடியான ஆட்டத்தினால் அவுஸ்திரேலியாவுக்கு எதிரான ஆஷஸ் டெஸ்ட் தொடரின் மூன்றாவது போட்டியில் இங்கிலாந்து அணி ஒரு விக்கெட்டினால் வெற்றிபெற்றுள்ளது.

இங்கிலாந்துக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள டிம் பெய்ன் தலைமையிலான அவுஸ்திரேலிய அணி ஜோ ரூட் தலைமையிலான இங்கிலாந்து அணியுடன் ஐந்து போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.

இதில் பேர்மிங்கமில் இடம்பெற்ற முதல் போட்டியில் அவுஸ்திரேலிய அணி 251 ஓட்டத்தினால் அபார வெற்றிபெற்றது. அதன் பின்னர் லண்டன் லோர்ட்ஸ் மைதானத்தில் இடம்பெற்ற இரண்டாவது போட்டி வெற்றி தோல்வியின்றி நிறைவடைந்தது. 

இந் நிலையில் கடந்த 22 ஆம் திகதி லீட்ஸ் மைதானத்தில் ஆரம்பமான மூன்றாவது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 52.1 ஓவரில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 179 ஓட்டங்களை பெற்றது.

அவுஸ்திரேலிய அணி சார்பில் மார்னஸ் லாபுசாக்னே 74 ஓட்டத்தையும், டேவிட் வோர்னர் 61 ஓட்டத்தையும், அதிகபடியாக எடுக்க, பந்து வீச்சில் இங்கிலாந்து அணி சார்பில் ஜோப்ர ஆர்ச்சர் 6 விக்கெட்டுக்களையும், ஸ்டூவர்ட் பிரோட் 2 விக்கெட்டுக்களையும், கிறிஸ் வோக்ஸ் மற்றும் பென் ஸ்டோக்ஸ் ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டுக்களையும் வீழ்த்தினர்.

இதன் பின்னர் பதிலுக்கு தனது முதல் இன்னிங்ஸை ஆரம்பித்த இங்கிலாந்து அணி அவுஸ்திரேலிய அணியின் பந்து வீச்சுக்கு நீண்ட நேரம் தாக்குப் பிடிக்காது 27.5 ஓவரில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 67 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது.

இங்கிலாந்து அணி சார்பில் ஜோ டென்லி மாத்திரம் 12 ஓட்டத்தை எடுத்திருக்க ஏனைய வீரர்கள் அனைவரும் ஒற்றை இலக்க ஓட்டத்துடன் ஆட்டமிழந்தனர். பந்து வீச்சில் அவுஸ்திரேலிய அணி சார்பில் சிறப்பாக பந்துப் பரிமாற்றம் மேற்கொண்ட ஜோஷ் ஹேசில்வுட் 5 விக்கெட்டுக்களையும், பேட் கம்மின்ஸ் 3 விக்கெட்டுக்களையும், ஜேம்ஸ் பாட்டின்சன் 2 விக்கெட்டுக்களையும் வீழ்த்தினர்.

உலக சாம்பியனான இங்கிலாந்து உள்ளூரில் சொப்ப ஓட்டங்களுக்குள் முடங்கியதால் கடும் விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளது.

112 ஓட்டங்கள் முன்னிலையுடன் 2 ஆவது இன்னிங்ஸை தொடங்கிய அவுஸ்திரேலிய அணி அணி 2 ஆவது நாள் முடிவில் 6 விக்கெட்டுக்கு 171 ரன்கள் எடுத்திருந்தது.

இந்த நிலையில் 3 ஆவது நாளான நேற்று தொடர்ந்து துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய 2 ஆவது இன்னிங்சில் 246 ஓட்டங்களுக்குள் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்தது.

அவுஸ்திரேலிய அணி சார்பில் மார்னஸ் லபுஸ்சேன் 80 ஓட்டத்தையும், மெத்தேயு வேட் 33 ஓட்டத்தையும் அதிகபடியாக பெற்றனர். பந்து வீச்சில் இங்கிலாந்து அணி சார்பில் பென் ஸ்டோக்ஸ் 3 விக்கெட்டுக்களையும், ஜோப்ர ஆர்ச்சர் மற்றும் ஸ்டூவர்ட் பிரோட் ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்களையும், கிறிஸ் வோக்ஸ் மற்றும் ஜாக் லீச் ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.

இதன் மூலம் இங்கிலாந்து அணிக்கு 359 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. 

வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாட ஆரம்பித்த இங்கிலாந்து அணியின் தொடக்கம் சொதப்பியது. ரோரி பேர்ன்ஸ் 7 ஓட்டத்துடனும், ஜோசன் ரோய் 8 ஓட்டத்துடனும் ஆட்டமிழந்து வெளியேறினர்.

இதன் பின்னர் அணித் தலைவர் ஜோ ரூட்டும், ஜோ டென்லியும் கைகோர்த்து அணியை சரிவில் இருந்து மீட்டெடுக்க போராடினர். ஓட்ட எண்ணிக்கை 141 ரன்களாக உயர்ந்த போது, ஜோ டென்லி 50 ஓட்டத்துடன் பெவிலியன் திரும்பினார்.

அதன் பின்னர் ஜோ ரூட் 59.3 ஆவது ஓவரில் 77 ஓட்டத்துடன் ஹேசல்வூட்டின் பந்து வீச்சில் ஆட்டமிழக்க அடுத்தடு களமிறங்கிய வீரர்கள் வரிசையாக ஆட்டமிழந்து வெளியேறினர்.

அதன்படி ஜோனி பெயர்ஸ்டோ 36 ஓட்டத்துடனும், ஜோஸ் பட்லர் ஒரு ஓட்டத்துடனும், கிறிஸ் வோக்ஸ் ஒரு ஓட்டத்துடனும், ஜோப்ர ஆர்ச்சர் 15 ஓட்டத்துடனும், ஸ்டூவர்ட் பிரோட் டக்கவுட்டனும் ஆட்டமிழந்தனர்.

இதனால் இங்கிலாந்து அணி 286 ஓட்டத்துக்கு 9 விக்கெட்டுக்களை பறிகொடுத்து தடுமாறியது. எனினும் ஆடுகளத்தில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த பென் ஸ்டோக்ஸ் இறுதியாக களமிறங்கிய ஜேக் லீச்சுடன் இணைந்து வெற்றிக்காக போராடினார்.

ஆறு ஓட்டங்களையும், நான்கு ஓட்டங்களையும் விளாசித் தள்ளிய அவர் 121.1 ஓவரில் டெஸ்ட் அரங்கில் தனது 8 ஆவது சதத்தை பூர்த்தி செய்தார். அது மாத்திரமன்றி அந்த ஓவரில் மாத்திரம் இங்கிலாந்து அணி 19 ஓட்டங்களை பெற்றது.

இதனால் இங்கிலாந்தின் வெற்றிக்கு ஒரு விக்கெட் மாத்திரம் கையிருப்பில் இருக்க 18 ஓட்டம் தேவைப்பட்டது. எனினும் நிலைமையை புரிந்து கொண்டு தனது பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய பென் ஸ்டோக்ஸ் 125.4 ஆவது ஓவரில் மேலும் ஒரு நான்கு ஓட்டத்தை விளாசித் தள்ளி இங்கிலாந்து அணிக்கு வெற்றியை பெற்றுக் கொடுத்தார்.

ஆடுகளத்தில் இறுதிவரை ஆட்டமிழக்காதிருந்த பென் ஸ்டோக்ஸ் 11 நான்கு ஓட்டம் 8 ஆறு ஓட்டம் அடங்கலாக 135 ஓட்டத்துடனும், ஜேக் லீச் ஒரு ஓட்டத்துடனும் ஆட்டமிழக்காதிருந்தனர்.

இதனிடையே 125 ஆவது ஓவரில் இங்கிலாந்து அணியின் மூன்று ஆட்டமிழப்புகள் கை நழுவிப் போனதும் குறிப்பிடத்தக்கது.

பந்து வீச்சில் அவுஸ்திரேலிய  அணி சார்பில் ஹேசல்வூட் 4 விக்கெட்டுக்களையும், நெதன் லியோன் 2 விக்கெட்டுக்களையும் பேட் கம்மின்ஸ் மற்றும் ஜேம்ஸ் பேட்டின்சன் ஆகியோர தலா ஒவ்வொரு விக்கெட்டுக்களையும் வீழ்த்தினர்.

இந்த வெற்றியின் மூலம் தொடர் 1:1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வீராங்கனையை முத்தமிட்ட ஸ்பானிய கால்பந்து சம்மேளன...

2024-03-29 09:43:13
news-image

ரியான் பரக்கின் அதிரடி ராஜஸ்தானை வெற்றிபெறச்...

2024-03-29 00:52:31
news-image

19 வயதின் கீழ் ஆஸி. அணியை...

2024-03-28 20:03:31
news-image

இலங்கை கால்பந்தாட்ட அணி, ஜனாதிபதியை சந்தித்தது

2024-03-28 17:49:42
news-image

எஸ்.எஸ்.சி.யின் 125 வருட கொண்டாட்ட விழா...

2024-03-28 13:22:56
news-image

பங்களாதேஷுடனான 2ஆவது டெஸ்ட்: உபாதைக்குள்ளான ராஜித்தவுக்குப்...

2024-03-28 13:22:16
news-image

19இன் கீழ் மகளிர் மும்முனை கிரிக்கெட்...

2024-03-28 00:56:33
news-image

சாதனைகள் படைக்கப்பட்ட ஐபிஎல் போட்டியில் மும்பையை...

2024-03-28 00:04:56
news-image

சில்ஹெட் டெஸ்டில் தலா 2 சதங்கள்...

2024-03-27 22:22:22
news-image

இலங்கையில் மகளிர் ரி20 ஆசிய கிண்ண...

2024-03-27 22:09:33
news-image

குஜராத்தை வீழ்த்தி இரண்டாவது நேரடி வெற்றியை...

2024-03-27 01:34:06
news-image

ஐ.பி.எல் 2024 : குஜராத் டைட்டன்ஸ்...

2024-03-26 23:43:35