(செ.தேன்மொழி)

கண்டி, மாவனெல்ல பகுதியில் பயங்கரவாத தாக்குதல்களின் பின்னர் தடைச் செய்யற்பட்டுள்ள இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்புகளுக்கு உதவிகளை செய்த குற்றச்சாட்டின் கீழ் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மாவனெல்ல - முருத்தவெல பகுதியில் இன்று அதிகாலை கொழும்பு குற்றப்பிரிவினருக்கு கிடைக்கப் பெற்ற தகவலுக்கமையவே சந்தேக இவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்தது.

குறித்த பகுதியைச் சேர்ந்த 60 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர் ஆவார்.

சந்தேக நபர் தடைச் செய்யப்பட்டுள்ள இஸ்லாம் அடிப்படைவாத அமைப்புகளுக்கு உதவிகளை வழங்கியுள்ளதாக பொலிஸாரின் விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது. 

சந்தேக நபர் கொழும்பு குற்றப் பிரிவினரால் தடுத்து வைத்து விசாரணைக்குட்படுத்தப்பட்டு வருகின்றார்.