திருகோணமலை கந்தளாய் பகுதியில் பத்து கிலோ பன்றி இறைச்சியை அனுமதிப்பத்திரமின்றி கொண்டு சென்ற இருவரை அக்போபுர பொலிஸார் இன்று(25) கைது செய்துள்ளதாக தெரிவிக்கின்றனர்.

கந்தளாய், அக்போபுர பகுதியைச் சேர்ந்த 21,மற்றும் 23 வயதுடைய இருவரே இவ்வாறு  கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

வான்எல பகுதியிலிருந்து அக்போபுர பிரதேசத்திற்கு மோட்டார் சைக்கிளில் அனுமதிப்பத்திரமின்றி பத்து கிலோ பன்றி இறைச்சியை கொண்டு சென்ற போதே போக்குவரத்து பொலிஸாரினால் சோதனை மேற்கொண்ட போதே குறித்த இருவரையும் கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சந்தேக நபர்களை தடுத்து வைத்துள்ளதோடு நாளைய தினம்(26) கந்தளாய் நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபர்கள் பயன்படுத்திய மோட்டார் சைக்கிள் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.