ஜனவரி 2009 லசந்த விக்கிரமதுங்க சித்திரவதை மற்றும் சட்டத்துக்கு புறம்பான கொலை தொடர்பில் அமெரிக்காவில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் கலிபோனியா மத்திய மாவட்ட நீதிமன்றத்தில் ஜனாதிபதி வேட்பாளரான கோத்தபாய ராஜபக்ஷவின் சட்டத்தரணிகள் புதிய மனுவை தாக்கல் செய்துள்ளனர். 

இக் குற்றச்சாட்டை மறுப்பதுடன் இக்குற்றச்சாட்டு உண்மையாக இருக்கின்ற பட்சத்திலும் கூட இராஜதந்திரி என்ற ரீதியில் வெளிநாட்டு அலுவலர் சலுகை அடிப்படையில் இவ் வழக்கை அணுக வேண்டும் என கோத்தபாயவின் சட்டத்தரணிகள் நீதி மன்றத்தை கேட்டுள்ளனர். 

இக் குற்றச்சாட்டின் முறைப்பாடு உண்மையாக இருக்கும் என்ற ஊகத்தில் கூட இவ் வழக்கில் சட்டப்பூர்வ ஆதாரப்பற்றாக்குறை இருப்பதாக ராஜபக்ஷவின் சட்டதரணிகள் தெளிவுப்படுத்தியுள்ளனர். 

ஜனாதிபதி வேட்பாளர் என்ற ரீதியில் இலங்கையர்கள் இவ் வழக்கை உன்னிப்பாக அவதானித்து வரும் வேளையில் கோத்தபாய ராஜப்கஷ இக் கருத்தை நீதிமன்றத்துக்கு தெரிவித்துள்ளார். அதேவேளை இக் குற்றச்சாட்டை கோத்தபாய ராஜபக்ஷ வன்மையாக மறுப்பதாகவும் அவரது சட்டத்தரணிகள் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர். 

லசந்த விக்ரமதுங்கவின் மகளான அஹிம்ஷா விக்கிரமதுங்க தொடுத்துள்ள இவ் வழக்கில் இலங்கையின் பாதுகாப்பு செயலராக இருந்த கோத்தபாய ராஜபக்ஷ அதிகார மட்டத்திலேயே இதனை புரிந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

எனவே இவ் வழக்கில் பொது சட்ட வெளிநாட்டு அலுவலர் சலுகையின் கீழ் விசாரித்து இவ் வழக்கை தள்ளுப்படி செய்ய வேண்டும் என ஜனாதிபதி வேட்பாளரான கோத்தபாயவின் சட்டத்தரணிகள் அமெரிக்க நீதிமன்றத்தில் எடுத்துரைத்துள்ளனர்.