புத்தளம், உடப்பு பகுதியில் தந்தையொருவர் தனது இரு குழந்தைகளுக்கும் விஷம் கொடுத்து கொலை செய்து, தானும் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

13 மற்றும் 07 வயதுடைய இரு மகன்மார்களே இவ்வாறு உயிரிழந்ததுடன், தற்கொலை செய்து கொண்ட நபர் 31 வயதுடையவர் எனவும் ஆரம்ப கட்ட விசாரணைகளில் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும், உயிரிழந்த இரண்டு பிள்ளைகளின் சடலங்களும் புத்தளம் பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாவும், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அத்தோடு, இலங்கையில் நாளொன்றுக்கு சராசரியாக 11 பேர் தற்கொலை செய்து கொள்வதாக தகவல்கள் வெளிவந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.