(செ.தேன்மொழி)

சியம்பலாண்டுவ பகுதியில் சட்டவிரோதமாக புதையல் அகழ்வில் ஈடுப்பட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சியம்பலாண்டுவ - கிம்புலாவல பகுதியில் நேற்றிரவு 7.40 மணியளவில் மொனராகலை புராதன சொத்து பாதுகாப்பு பிரிவிற்கு கிடைக்கப் பெற்ற தகவலுக்கமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்தது.

மொனராகலை மற்றும் பதுளை பகுதிகளைச் சேர்ந்த 23,30 ஆகிய வயதுடைய இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடமிருந்து புதையல் அகழ்விற்காக பயன்படுத்திய உபகரணங்களும் மீட்கப்பட்டுள்ளது. 

இதனை தொடர்ந்து சந்தேக நபர்கள் இருவரும் மேலதிக விசாரணைகளுக்காக சியம்பலாண்டுவ பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில்,  பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.