(பானா. தங்கம் )
அட்டன் நகரம் மர­பு­ரிமை நக­ர­மாக பிர­க­ட­னப்­ப­டுத்­தப்­பட்டு சகல விப­ரங்­களும் இணை­ய­ த­ளத்தின் ஊடாக அனை­வரும் அறிந்து கொள்ளும் வகையில் வெளி­யிட நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்டு வரு­கின்­றது என அட்டன் – டிக்­கோயா நகர பிதா எஸ். பாலச்­சந்­திரன் மாதாந்த அமர்வில் தலைமை வகித்து பேசும் போது தெரி­வித்தார். 

அவர் தொடர்ந்து உரை­யாற்­று­கையில், அட்டன் நக­ர­மா­னது புரா­தன சின்­னங்கள், வர­லா­றுகள் மற்றும் அவற்­றுடன் இணைந்த மக்­களின் சமூக, கலை, கலா­சார விழு­மி­யங்கள், அர­சியல் பொரு­ளா­தார அம்­சங்­க­ளையும் தன்­ன­கத்தே கொண்­டுள்­ளது. அதற்­காக இணை­ய­தளம் ஒன்று விரைவில் உரு­வாக்­கப்­ப­ட­வுள்­ளது. நூல­கக்­ கு­ழுவின் தலை­வ­ரான நகர சபை உறுப்­பினர் எஸ். கேச­வ­மூர்த்தி இணையதளத்­துக்கு பொறுப்­பாக இருப்பார். 

   

மேலும்  அட்டன் நகரில் சேவையில் ஈடு­படும் முச்­சக்­கரவண்டி சார­தி­க­ளுக்கு அடை­யாள அட்­டைகள் நகர சபை­யினால் வழங்­கப்­ப­ட­வுள்­ளன. இதற்­கென முச்­சக்­கர வண்­டி­களின் விப­ரங்கள் அனைத்தும் தற்­போது கணனி மய­மாக்­கப்­பட்­டுள்­ளன. 

இந்த வேலைத் திட்­டத்­துக்கு பெரு­ம­ளவு பங்­க­ளிப்பு செய்­துள்ள உறுப்­பினர் எம்.ஆர்.விஜ­யா­னந்­த­னுக்கு நகர சபையின் சார்பில் நன்­றியை தெரி­வித்துக் கொள்­கிறேன்.   

அட்டன் நகரின் வீதி­களில் போக்­கு­வ­ரத்தை ஒழுங்­க­மைத்து பொது­மக்­களின் பாது­காப்பை உறுதிப்படுத்­து­வ­தற்­காக நகர வீதி­களை அக­ல­மாக்கும் பணிகள் இடம்­பெற்று வரு­கின்­றன.   

அத்­தோடு தற்­போது நகரில் நிலவி வரும் கடு­மை­யான கால­நி­லையை கருத்­திற்­கொண்டு, உறுப்­பி­னர்கள்    தத்­த­மது வட்­டா­ரங்­களில் அனர்த்­தங்கள் நேர்­கின்ற சந்­தர்ப்­பங்­களில் நக­ர­ச­பை­யுடன் தொடர்பு கொண்டு பொது­மக்­க­ளுக்கு தேவை­யான உத­வி­களைப் பெற்றுக் கொடுக்க முடியும் என்றார்.