நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையால் திருகோணமலை, சல்லிகோவில் பகுதி கடற்பரப்பில் தத்தளித்து கொண்டிருந்த டிங்கி ரக படகு ஒன்றையும் 3 மீனவர்களை கடற்படையினர் மிட்டுள்ளனர்.

இதன்போது குறித்த படகு இயந்திய கோளாரினால் கடலில் தத்தளிப்பதை அவதானித்த கடற்படையினர் அவர்களுக்கு தொழில்நுட்ப உதவிகளை வழங்கியுள்ளனர்.

இந்நிலையில் சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்டு சோர்வடைந்து காணப்பட்ட மீனவர்களுக்கு கடற்படையினர் முதலுதவிகளையும் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.