முப்படை, பொலிஸ் மற்றும் சிவில் பாதுகாப்பு அணியின் நடனக் குழுக்களுக்கு நேற்று ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன பாராட்டு தெரிவித்தார்.

நேற்று (23) பிற்பகல் ஜனாதிபதி மாளிகையில் நடனக் குழுவினருக்கு பாராட்டு தெரிவித்த ஜனாதிபதி, நடனக் கலைஞர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களும் வழங்கி வைத்தார்.

அரச வைபவங்களை கலைநயமாகவும் வெற்றிகரமாகவும் நடத்துவதற்கு இந்த நடனக் குழுக்கள் வழங்கும் பங்களிப்பை பாராட்டிய ஜனாதிபதி, அவர்ளின் சேவைகளுக்காக தனது வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.

ஜனாதிபதி மாளிகையில் முதன்முறையாக இத்தகைய சந்திப்பொன்றை ஏற்பாடு செய்தமை தொடர்பில் நடனக் கலைஞர்கள் ஜனாதிபதிக்கு நன்றி தெரிவித்தனர்.

அதனைத் தொடர்ந்து நிகழ்வில் கலந்துகொண்ட அனைவருக்கும் இராப்போசன விருந்து வழங்கப்பட்டது.

அதன்பின்னர் மகாவலி நல்லிணக்க நதி, 95 பின் மகாவலி, பொலன்னறுவை ஆராய்ச்சி நூல் மற்றும் “Moragahakanda Dream Reservoir” ஆகிய நூல் தயாரிப்புக் குழுக்களுக்கும் ஜனாதிபதிக்கும் இடையிலான சந்திப்பொன்றும் இடம்பெற்றது.