போலந்து நாட்டில் இடிமின்னல் தாக்கி இரண்டு குழந்தைகள் உட்பட ஐந்து பேர் உயிரிழந்த  சம்பவம்  ஒன்று இடம்பெற்றுள்ளது.

போலந்து நாட்டின் தெற்கு பகுதியில் தத்ரா பிராந்தியத்திலுள்ள மலைப்பிரதேச கியோவண்ட் சிகரத்தில் நேற்று முன்தினம் 100-க்கும் மேற்பட்ட மலையேற்ற வீரர்கள் கியோவண்ட் சிகரத்தில் ஏறிக்கொண்டிருந்தனர்.

அப்போது அந்த பகுதியில், திடீரென சக்தி வாய்ந்த புயல் தாக்கியது. பெரும் சூறாவளியும் வீசியது. அத்துடன் இடி மின்னலுடன் கனமழை பெய்தது. அப்போது தத்ரா பிராந்தியத்தின் பல்வேறு பகுதியில் மின்னல் தாக்கியது. இதில் கியோவண்ட் சிகரத்தில் ஏறிக்கொண்டிருந்த மலையேற்ற வீரர்களும் சிக்கினர். 3 வீரர்கள் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தனர்.

மின்னல் தாக்கியதில் 150 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் அனைவரும் மீட்கப்பட்டு அருகில் உள்ள வைத்தியவாலைகளில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு உள்ளனர்.

மின்னல் தாக்கியதை தொடர்ந்து, கியோவண்ட் சிகரத்தில் இருந்த மலையேற்ற வீரர்கள் அனைவரும் ஹெலிகப்டர்கள் மூலம் மீட்கப்பட்டனர்.