(இராஜதுரை ஹஷான்)

மலையக மக்களின் வீடு, கல்வி,தொழில்  ஆகிய அத்தியாவசிய  தேவைகளில் தற்போதும் நிலவும்  பிரச்சினைகளுக்கு குறுகிய காலத்திற்குள் தீர்வு பெற்றுக் கொடுக்கப்படும்.

மலையகத்தை சிறந்த  சுற்றுலா வலயமாக மேம்படுத்த வேண்டுமாயின் முதலில் அங்கு வாழும் மக்களின் வாழ்க்கை தரம்  முன்னேற்றமடைய வேண்டும் என  பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர்  கோதாபய ராஜபக்ஷ தெரிவித்தார்.

பொதுஜன பெரமுனவின் இளைஞர் முன்னணியின்  தேசிய  மாநாடு இன்று கொழும்பில் உள்ள தாமரை தடாக அரங்கில் இடம் பெற்றது. இந்நிகழ்வில் கலந்துக் கொண்டு உரையாற்றுகையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.