உரகா மற்றும் தக­ஷி­மா­யா­யே­யாமா ஆகிய ஜப்­பா­னியக் கடற்­ப­டையின் இரண்டு போர்க்­கப்­பல்கள் நல்­லெண்ண விஜயம் மேற்­கொண்டு கொழும்புத் துறை­மு­கத்தை வந்­த­டைந்­துள்­ளன. எதிர்­வரும் 14 ஆம் திகதி சனிக்­கி­ழமை வரையில் கொழும்பு துறை­மு­கத்தில் இந்த போர்க் ­கப்­பல்கள் நங்­கூ­ர­மிட்­டி­ருக்கும்.

இலங்­கைக்­கான நல்­லெண்ண மற்றும் விநி­யோக நோக்கம் கொண்டு உரகா மற்றும் தக­ஷி­மா­யா­யே­யாமா ஆகிய ஜப்­பா­னியக் கடற்­ப­டையின் போர்க் ­கப்­பல்கள் நேற்றும் முன்­தினம் கொழும்பு துறை­மு­கத்தை வந்­த­டைந்­தன. இந்த போர்க்­கப்­பல்­க­ளுக்கு கொழும்புத் துறை­மு­கத்தில் இலங்கை கடற்­ப­டை­யினர் பாரம்­ப­ரிய முறைப்­படி வர­வேற்பு அளித்­தனர். மேலும் இந்தப் போர்க்­கப்­பல்­களில், ஜப்­பா­னியக் கடற்­ப­டையின் கண்­ணி­வெ­டி­களை அகற்றும் 51 ஆவது பிரிவின் கட்­டளை தள­பதி கப்டன்  தாஷி­ஹிரோ தகாய்­வாவும் இலங்­கைக்கு வந்­துள்ளார்.

மேலும் இரண்டு போர்க்­கப்­பல்­களின் கட்­டளை அதி­கா­ரி­களும் இணைந்து இலங்கை கடற்­படைத் தள­ப­தி­யு­டனும் அதி­கா­ரி­க­ளு­டனும் நேற்று சந்­திப்பை நடத்­தினர். அத்­தோடு இந்த இரண்டு ஜப்­பா­னியப் போர்க்­கப்­பல்­களும் எதிர்­வரும் 14ஆம் திக­தி­வரை கொழும்புத் துறை­மு­கத்தில் நங்­கூ­ர­மிட்­டி­ருக்கும். அத்­துடன் ஜப்­பா­னிய கடற்­படை வீரர்­களும் இலங்­கையின் கடற்­ப­டை­யி­னரும் கூட்டு பயிற்­சி­களில் ஈடு­ப­ட­வுள்­ளனர்.

இதே வேளை கடந்த ஐந்து மாத ­கா­லத்தில் சர்­வ­தேச நாடு­களைச் சேர்ந்த ஆறு போர்க்­கப்­பல்கள் இலங்­கைக்கு விஜயம் மேற்­கொண்­டுள்­ளன.

அண்­மையில் எப்.என்.எஸ் “எகோநிட்” எனும் பிரான்சின் கடற்­ப­டைக்கு உரித்தான போர்க்­கப்பல் இலங்­கைக்கு வருகை தந்­தி­ருந்­தது. அதேபோல் “ப்ளூ ரிட்ச்” எனும் அமெ­ரிக்க போர்க்­கப்­பலும், “எப் ரோன்” எனும் ரஷ்ய போர்க்­கப்­பலும் இலங்கை வந்­தி­ருந்­தன.

அத்­துடன் “எச்.டி.எம்.எஸ் பட்­டனி” எனும் தாய்­லாந்து கடற்­படை கப்பல், “எச்.எம்.எஸ் டிபென்டர்” எனும் பிரித்­தா­னிய கடற்­ப­டையின் போர்க்­கப்பல், “விக்­கி­ர­மா­தித்­தியா” எனும் இந்­திய போர்க்­கப்பல் என ஐந்து சர்­வ­தேச போர்க்­கப்­பல்கள் இவ்­வ­ருடம் கொழும்பு துறை­மு­கத்தை வந்­த­டைந்­தி­ருந்­தமை குறிப்­பி­டத்­தக்­கது.

மேலும் கடந்த ஆண்டின் ஆறு­மாத காலத்தில் இலங்­கைக்கு சர்­வ­தேச நாடு­களைச் சேர்ந்த 25 போர்க்­கப்­பல்கள் விஜயம் மேற்கொண்டுள்ளன. இதில் ரஷ்யா, அவுஸ்திரேலிய, ஜப்பான், பங்களாதேஷ், ஓமன், இந்தியா, பாகிஸ்தான், கொரியா மற்றும் சீனா ஆகிய நாடுகளைச் சேர்ந்த போர்க்கப்பல்களே இவ்வாறு இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ளது.