நியூசிலாந்து அணிக்கு எதிரான இருபதுக்கு இருபது போட்டியில் 15 பேர் கொண்ட குழாமை இலங்கை கிரிக்கெட் நிறுவனம் அறிவித்துள்ளது.

இவ் அணியின் தலைவராக லசித் மலிங்க அறிவிக்கப்பட்டுள்ளதுடன் , உபதலைவராக நிரோஷன் டிக்வெல்ல நியமிக்கப்பட்டுள்ளார்.

இந் நிலையில் அஞ்சலோ மெத்தியூஸ் மற்றும் திஸர பெரேரா நடைபெறவிருக்கும் இருபதுக்கு இருபது போட்டியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.