மொரகாஹேன – கோரலஇம பகுதியில் வயல் காணியொன்றில் இருந்த பாழடைந்த கிணற்றில் வீழ்ந்து முதியவரொருவர் உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, கோரலஇம – சில்வர் வெலிவத்தை பகுதியை சேர்ந்த 63 வயதான முதியவரொருவரே நேற்று மாலை இவ்வாறு பாழடைந்த கிணற்றில் வீழ்ந்து உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளது.

உயிரிழந்த முதியவரொருவரின் சடலம் தற்போது ஹொரணை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாகவும், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருவதாகவும் தெரியவந்துள்ளது.