இந்திய அணித்தலைவர் விராட்கோலி தன்மீது வைத்த நம்பிக்கை சரியானது என்பதை நிரூபித்துவிட்டதாக இந்திய அணியின் சகலதுறை வீரர் ரவீந்திர ஜடேஜா தெரிவித்துள்ளார்.

மேற்கிந்திய அணிக்கு எதிரான முதல் டெஸ்டில் அரைசதம் பெற்று இந்திய அணியின் நிலையை ஸ்த்திரப்படுத்திய ஜடேஜா தனது இனிங்ஸ் குறித்து இவ்வாறு கருத்து வெளியிட்டுள்ளார்.

நான் துடுப்பெடுத்தாடிய வேளை இணைப்பாட்டங்களில் கவனம் செலுத்தினேன்,என தெரிவித்துள்ள அவர் பின்வரிசை ஆட்டக்காரர்களுடன் எவ்வாறு இணைந்து விளையாடுவது என்பதிலும் கவனம் செலுத்தினேன் என குறிப்பிட்டுள்ளார்.

நான் போட்டி குறி;த்து மாத்திரம் கவனம் செலுத்தினேன் எனது சிறந்த பங்களிப்பை வழங்கவிரும்பினேன் எனவும் ஜடேஜா தெரிவித்துள்ளார்.

விக்கெட் காப்பாளர் ரிசாப் பண்ட் ஆட்டமிழந்ததை தொடர்ந்து ஆடுகளத்திற்குள் நுழைந்த இசாந் சர்மாவுடன் இணைந்து 60 ஓட்டங்களை ரவீந்திர ஜடேஜா பெற்றமை குறிப்பிடத்தக்கது.

விக்கெட்டை இழக்காமலிருப்பதற்கு கடுமையாக போராடுமாறு இசாந்த சர்மாவை கேட்டுக்கொண்டதாக ஜடேஜா தெரிவித்துள்ளார்.

நான் உறுதியான இணைப்பாட்டங்களில் கவனம் செலுத்தினேன் ரிசாப்பந்த் ஆட்டமிழந்த பின்னர் விக்கெட்கை இழக்காமலிருப்பது குறித்து இசாந்த சர்மாவிற்கு ஆலோசனை வழங்கினேன், நாங்கள் ஒவ்வொரு ஓவர்கள்  குறித்து மாத்திரம்; கவனம் செலுத்தினேன் என  ஜடேஜா தெரிவித்துள்ளார்.

அணித்தலைவரின் ஆதரவு உள்ளது என்பது ஒரு வீரரை பொறுத்தவரை மிகச்சிறந்த விடயம் எனவும் ரவீந்திர ஜடேஜா தெரிவித்துள்ளார்.

அணித்தலைவர் உங்கள் மீது நம்பிக்கை வைக்கும் போது நீங்கள் சிறப்பாக உணர்வீர்கள்,சிறப்பாக விளையாடியதன் மூலம் அந்த நம்பிக்கையை நான் காப்பாற்றியுள்ளேன் எனவும் ரவீந்திர ஜடேஜா தெரிவித்துள்ளார்.