மன்னார்   வங்காலை கடற்கரை பகுதியில் 'கொக்கெய்ன்' என சந்தேகிக்கப்படும் 983 கிராம் எடை கொண்ட போதைப்பொருளை இன்று (24) சனிக்கிழமை அதிகாலை கடற்படையினர் மீட்டுள்ளனர்.

மன்னார் பிரதேச ஊழல் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் மற்றும் கடற்படையினர் இணைந்து இன்று சனிக்கிழமை (24) அதிகாலை வங்காலை கடற்கரை பகுதியில் திடீர் சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

இதன் போது வங்காலை கடற்கரை பகுதியில் உள்ள மீன் வாடி ஒன்றிற்கு அருகாமையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் குறித்த பொதியை மீட்டுள்ளனர்.

குறித்த பொதியில் 983 கிராம் எடை கொண்ட கொக்கெய்ன் என சந்தேகிக்கப்படும் போதைப்பொருள் காணப்பட்டதாக கடற்படை தெரிவித்துள்ளது.

மீட்கப்பட்ட குறித்த போதைப்பொருள்   வாங்கலை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை வங்காலை கடற்படையினர் மேற்கொண்டு வருகின்றனர்.