வவுனியாவில் திருக்குறள் பெருவிழா குடியிருப்பு பிரதேச கலாச்சார மண்டபத்தில் சிறப்பாக இடம்பெற்றது.

ஜனாதிபதியின் எண்ணக்கருவில் வடக்கு மாகாண ஆளுநரின் நெறிப்படுத்தலில் வட மாகாண பண்பாட்டாலுவல்கள் திணைக்களமும் கல்வி அமைச்சும் ஏற்பாடு செய்துள்ள திருக்குறள் விழா வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் ஐ. எம். ஹனீபா தலைமையில்  இடம்பெற்றது.

இதன்போது வவுனியா மேலதிக அரசாங்க அதிபர் தி. திரேஸ்குமார் வரவேற்புரையை நிகழ்த்திய துடன் வவுனியா கல்வியியல் கல்லூரியின் ஓய்வு நிலை பீடாதிபதி க. சிதம்பரநாதன் தொடக்கவுரையை நிகழ்த்தியிருந்தார்.

இதனையடுத்து தமிழ்மண அகளங்கன் தலைமையுரையினையும் சிறப்புரையினை யாழ் பல்கலைக்கழக விரிவுரையாளர் சர்வேஸ்வரா சிறப்புரையினையும் நிகழ்த்தியிருந்தார்.

இதேவேளைக் கலை நிகழ்வுகளும் இதன்போது இடம்பெற்றது.