"கோத்தா பழைய கஞ்சி...!, அனுர பழைய சாதம்...!: எங்களது வெற்­றி­க­ர­மான ராஜ­தந்­திரம் இதுவே..

Published By: J.G.Stephan

24 Aug, 2019 | 10:45 AM
image

எங்கள் வேட்­பா­ளரை இன்று முழு நாடும் “யார் அவர், யார் அவர், யார் அவர்” என தேடு­கி­றது.  இதுவே எங்கள் வெற்­றி­க­ர­மான ராஜ­தந்­திரம். இன்று கோத்தா பழைய கஞ்சி. அனுர பழைய சாதம். முழு நாட் டின் அவ­தா­னத்­தையும் எம் பக்கம் நாம் இன்று திருப்பி உள்ளோம். உரிய வேளையில்

 எமது வெற்றி வேட்­பா­ளரை நாம் அறி­விப்போம். ஆனால் அந்த அறி­விக்கும் வேளையை நாமே தீர்­மா­னிப்போம்.   என  தனியார் தொலைக்­காட்சி ஒன்றில் இடம்­பெற்ற  அர­சியல் கலந்­து­ரை­யாடல் நிகழ்வில் தமிழ் முற்­போக்கு கூட்­ட­ணியின் தலை­வரும், அமைச்­ச­ரு­மான மனோ கணேசன் கூறினார்.  

ஸ்ரீலங்கா பொது­ஜன முன்­னணி வேட்­பாளர் கோத்­தாவின் குடி­யு­ரிமை விவ­காரம், ஒரு சட்ட விவ­காரம். அதை அமெ­ரிக்க அரசும், இலங்கை தேர்தல் ஆணை­ய­கமும், தேர்தல் கண்­கா­ணிப்பு குழுக்­களும் பார்த்­துக்­கொள்­ளட்டும். அந்த குடி­யு­ரிமை பிரச்­சி­னையை கட்­டிப்­பி­டித்­துக்­கொண்டும், தூக்­கிப்­பி­டித்­துக்­கொண்டும், நாம்  அர­சியல் செய்ய முடி­யாது. அப்­படி செய்­வதில் எனக்கு உடன்­பாடு இல்லை    என்றும் அவர் குறிப்­பிட்டார். 

ஸ்ரீலங்கா பொது­ஜன முன்­ன­ணியின்  உதய கம்­மன்­பில, இந்­திக அனு­ருத்த, ஐக்­கிய தேசிய கட்­சியின் ஹெக்டர் அப்­பு­ஹாமி ஆகிய எம்.பி.  க்களும் கலந்­துக்­கொண்ட இந்த சிங்­கள மொழி­யி­லான விவா­தத்தில் அமைச்சர் மனோ மேலும் கூறி­ய­தா­வது,

உரு­வா­கி­வரும் எங்­க­ளது ஜன­நா­யக தேசிய முன்­ன­ணிக்கும், ஸ்ரீலங்கா பொது­ஜன முன்­ன­ணிக்கும் இடை­யி­லான வித்­தி­யாசம் என்ன தெரி­யுமா? அது புரிந்­து­கொள்ள மிகவும் இல­கு­வா­னது. ஆனால், அதை உங்­களில் பலர் புரிந்­துக்­கொள்ள தவ­று­கி­றீர்கள்.

ஸ்ரீலங்கா பொது­ஜன முன்­ன­ணியின் தலை­மையில் இருப்போர் ஒரு குடும்ப அங்­கத்­த­வர்கள். எமது ஜன­நா­யக தேசிய முன்­னணி தலை­மையில் இருப்போர் பல கட்­சி­களின் அங்­கத்­த­வர்கள். ஆகவே உங்கள் தலைமை குடும்­ப­மான ராஜ­பக்ச குடும்­பத்­தில்தான் ஒரு­வரை நீங்கள் வேட்­பா­ள­ராக போட வேண்டும். போட்டும் உள்­ளீர்கள். இனி வருங்­கா­லத்தில் ஒரு­வேளை நீங்கள் வென்றால், பிர­தமர் மற்றும் பிர­பல அமைச்­சர்கள் எல்­லோ­ருமே ராஜ­பக்ச குடும்ப அங்­கத்­த­வர்­கள்தான். இந்த குடும்­பத்­துக்கு வெளியே தகு­தி­யா­ன­வரை  தேடி­பார்க்க உங்­களால் முடி­யாது. அதுதான் உங்கள் ஜன­நா­யகம்.

ஆனால், நாங்கள்  எங்­க­ளது ஜன­நா­யக தேசிய முன்­ன­ணி­யிலே, கட்சி அங்­கத்­த­வர்­களில் இருந்தே தகு­தி­யா­ன­வரை நாம் தேடி நிய­மிக்­கிறோம். இதுதான் எங்கள் ஜன­நா­யகம். குடும்­பமா? கட்­சியா? எங்கே ஜன­நா­யகம் உள்­ளது என்­பதை தேடிப்­பா­ருங்கள். அதற்­காக ஒரே குடும்­பத்தில் இருந்து பலர் அதே கட்­சிக்கு உள்ளே வரு­வதை நான் மறுக்­க­வில்லை. தென்­னா­சி­யாவில் இது வழமை. உல­கிலும் பல நாடு­களில் ஒரே குடும்­பத்தை சேர்ந்தோர் ஒரே கட்­சியில் இருக்­கி­றார்கள். இந்த விட­யமோ அல்­லது உங்கள் வேட்­பாளர்  கோத்­தா­ப­யவின் இரட்டை குடி­யு­ரிமை பிரச்­சி­னை­யையோ எனக்கு முக்­கி­ய­மில்லை.

ஒரே குடும்பம் என்­ப­தால்தான் உங்­களால் தாம­த­மில்­லாமல் வேட்­பா­ளரை அறி­விக்க முடிந்­தது. இதே கார­ணத்­தால்தான் நாம் இன்­னமும் எமது வேட்­பா­ளரை அறி­விக்­க­வில்லை. இது ஒரு ஜன­நா­யக தாமதம்.  இதை புரிந்­துக்­கொள்­ளுங்கள்.

நான் பகி­ரங்­க­மாக உங்கள் வேட்­பாளர்  கோத்­தா­பய ராஜ­பக்­ச­விற்கும், ஜே. வி. பி .  வேட்­பாளர் நண்பர் அனுர குமார திசா­நா­யக்­க­விற்கும் வாழ்த்­துக்­களை ஏற்­க­னவே கூறி­யுள்ளேன். எனக்கு உங்கள் எவ­ரு­டனும் தனிப்­பட்ட விரோதம் கிடை­யாது. நான் அர­சியல் முரண்­பா­டு­களை உடம்பில், தலையில் ஏற்­றிக்­கொள்­வது இல்லை. ஆகவே மனப்­பூர்­வாக வாழ்த்­து­கிறேன். இது என் தனிப்­பட்ட கலாச்­சாரம். ஆனால், அர­சி­யலில் நமது கட்சி இருக்கும் இடம் வேறு. அது என் அர­சியல் கலாச்­சாரம்.    

எங்கள் வேட்­பா­ளரை இன்று முழு நாடும் “யார் அவர், யார் அவர், யார் அவர்” என தேடு­கி­றது. இன்று கோத்தா பழைய கஞ்சி. அனுர பழைய சாதம். எமது வேட்­பா­ளரை அறிந்­துக்­கொள்ள நாடு விரும்­பு­கி­றது. முழு நாட்டின் அவ­தா­னத்­தையும் எம் பக்கம் நாம் இன்று திருப்பி உள்ளோம். உரிய வேளையில் எமது வெற்றி வேட்­பா­ளரை நாம் அறி­விப்போம். ஆனால் அந்த அறி­விக்கும் வேளையை நாமே தீர்­மா­னிப்போம்.   

இங்கே இம்­முறை வேட்­பா­ளரை பெய­ரிடும் சந்­தர்ப்­பத்தை நாம் விரும்பி, ஐக்­கிய தேசிய கட்­சிக்கு வழங்கி உள்ளோம். 2010, 2015 வரு­டங்­களில் வெளியில் இருந்து வேட்­பாளர் வந்த கார­ணத்தால், இம்­முறை ஐக்­கிய தேசிய கட்­சியின் உள்ளே இருந்து வேட்­பாளர் வரு­வது மிகவும் நியா­ய­மா­னது. 

இதை நானே முதலில் கூறினேன். ஆகவே ஐதேக பெய­ரிடும் வேட்­பா­ளரை நாம், ஜன­நா­யக தேசிய முன்னணி தலைமை குழுவில் அங்கீகரிப்போம். இங்கு இப்போது ரணில், சஜித், கரு ஆகிய மூன்று பெயர்கள் பேசப்படுகின்றன. எவர் வந்தாலும் அவர் வெறும் வேட்பாளர் மட்டுமல்ல. அவர் எங்கள் அணி தலைவர்.  இங்கே அணி  என்ற தலைமைக்குழு முக்கியமானது. நாம் ரணில் ஆட்சிக்கு, சஜித் ஆட்சிக்கு, கரு ஆட்சிக்கு வித்திடவில்லை. எமக்கு தேவை சட்டத்தின் ஆட்சியாகும். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மின்சாரம் தாக்கி பாலித தேவரப்பெரும உயிரிழந்தார்!

2024-04-16 19:48:23
news-image

அதிவேக நெடுஞ்சாலையை பயன்படுத்தும் சாரதிகளுக்கு விசேட...

2024-04-16 19:16:12
news-image

நச்சுத் தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 505 பேர்...

2024-04-16 19:17:56
news-image

சாரதி உறங்கியதால் கிணற்றில் வீழ்ந்த ஆட்டோ...

2024-04-16 19:20:19
news-image

380 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள்...

2024-04-16 17:51:28
news-image

மாறி மாறி வருகின்ற அரசாங்கத்துடன் கூட்டு...

2024-04-16 17:03:46
news-image

சுகாதாரத்துறையில் மருந்துப்பொருள் மோசடி மட்டுமல்ல ;...

2024-04-16 17:05:24
news-image

தமிழ் மக்களின் சுமைதாங்கும் தர்ம தேவதையாக...

2024-04-16 16:32:21
news-image

நுவரெலியா - லிந்துலை சிறுவர் பராமரிப்பு...

2024-04-16 16:28:10
news-image

சட்டவிரோதமாக காணிக்குள் நுழைந்து பெண்ணின் 14...

2024-04-16 16:23:03
news-image

நானுஓயா ரயில் நிலையத்தில் பயணிகள் அவதி!

2024-04-16 16:05:39
news-image

புத்தாண்டு நிகழ்வில் கிரீஸ் மரம் சரிந்து...

2024-04-16 16:02:02