வலிந்து காணாமல்  ஆக்கப்பட்டோரின் பிராந்திய அலுவலகமொன்று யாழ்ப்பாணத்தில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

இன்று சனிக்கிழமை அதிகாலை இல.124, ஆடியபாதம் வீதி, யாழ்ப்பாணத்தில் இந்த அலுவலகம்  திறந்து வைக்கப்பட்டுள்ளது.

குறித்த அலுவலகம் யாழில் திறந்து வைக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகிய போது அதற்கு காணாமல் ஆக்கப்பட்டோர்களின் உறவினர்களில் சிலர் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். 

இநநிலையில் இன்றைய தினம் அதிகாலை வேளை அவசர அவசரமாக குறித்த அலுவலகம் திறந்து வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.