இசை கச்சேரி கூட்ட நெரிசலில் சிக்கி 5 பேர் பலி

Published By: Digital Desk 3

24 Aug, 2019 | 09:30 AM
image

அல்ஜீரியா நாட்டில் புகழ்பெற்ற ‘ராப்’ பாடகர் அப்டேரப்ஹா டெர்ராட்ஜீ இசைக் கச்சேரியில் கூட்ட நெரிசலில் சிக்கி 5 பேர் உயிரிழந்துள்ளார்கள்.

அல்ஜீரியா நாட்டின் தலைநகர் அல்ஜியர்சில் உள்ள மைதானம் ஒன்றில், சோல்கிங் என அழைக்கப்படும் அப்டேரப்ஹா டெர்ராட்ஜீயின் இசை கச்சேரிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அவரது இசையை கேட்டு ரசிக்க ஆயிரக்கணக்கான ரசிகர்கள் மைதானத்தில் திரண்டிருந்தனர்.

நிகழ்ச்சி தொடங்குவதற்கு ஒரு மணி நேரத்துக்கு முன்பாகவே கட்டுக்கடங்காத கூட்டம் கூடியதால் ரசிகர்களுக்கு சிரமம் ஏற்பட்டது. இதனால் கூட்டத்தில் ஒரு பகுதியினர் மைதானத்தை விட்டு வெளியேற முற்பட்டனர். அப்போது மைதானத்தின் ஒரு நுழைவாயிலுக்கு அருகே கடும் நெரிசல் ஏற்பட்டது.

ஒருவரையொருவர் முண்டியடித்துக்கொண்டு வெளியேற முற்பட்டதில் சிலர் கீழே விழுந்து கூட்டத்தினரின் கால்களில் மிதிப்பட்டனர். மேலும் சிலர் மூச்சு திணறல் ஏற்பட்டு மயங்கி விழுந்தனர். இப்படி கூட்ட நெரிசலில் சிக்கி 5 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.

அதே சமயம், படுகாயம் அடைந்த 25-க்கும் மேற்பட்டோர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதற்கிடையே, இப்படி ஒரு அசம்பாவிதம் நடந்தபோதும், இசை நிகழ்ச்சி இரத்து செய்யப்படாமல் திட்டமிட்டபடி நடந்ததாகவும், அது உள்ளூர் தொலைக் காட்சியில் நேரடியாக ஒளிபரப்பப்பட்டதாகவும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் இந்த சம்பவம் குறித்து ‘ராப்’ பாடகர் அப்டேரப்ஹா டெர்ராட்ஜீன் இதுவரை சமூக ஊடகங்களில் கருத்து தெரிவிக்கவில்லை.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நான் இந்தியாவுக்குச் செல்வேன் - ட்ரம்ப்...

2025-11-07 16:00:42
news-image

தாய்லாந்தில் பிரபஞ்ச அழகிப் போட்டி -...

2025-11-07 15:27:34
news-image

கல்மேகி புயலின் தாக்கம் - பிலிப்பைன்ஸ்,...

2025-11-07 14:10:04
news-image

கல்மேகி புயலில் சிக்கி பிலிப்பைன்ஸில் உயிரிழந்தவர்களின்...

2025-11-07 13:42:55
news-image

உலகிலேயே ஒரு ட்ரில்லியன் டொலருக்கு சொந்தக்காரராகும்...

2025-11-07 12:38:54
news-image

ஒரு குழந்தையின் தாய் எறும்பு பயத்தால்...

2025-11-07 03:11:10
news-image

மெக்சிக்கோ ஜனாதிபதியிடம் அத்துமீறி முத்தமிட முயன்ற...

2025-11-06 13:32:30
news-image

"நிறைய இழக்க நேரிடும்" - மம்தானிக்கு...

2025-11-06 13:29:51
news-image

போஸ்னியா முதியோர் இல்லத்தில் தீவிபத்து: 11...

2025-11-06 12:45:24
news-image

'நாசா' தலைவராக எலான் மஸ்க் ஆதரவாளர்...

2025-11-06 12:07:03
news-image

கல்மேகி சூறாவளியால் 114 பேர் பலி...

2025-11-06 11:24:25
news-image

நியூயோர்க் நகரின் மேயராக ஸோஹ்ரான் மம்தானி...

2025-11-05 12:05:31