(இராஜதுரை ஹஷான்)

அரச   சுகபோகங்களை  அனுபவிப்பதற்காக  ஆட்சியினை  கைப்பற்ற முனையவில்லை.  அதிகாரம் கிடைத்தாலும் கிடைக்காவிடினும்    மக்களோடு மக்களாகவே   வாழ்வேன்.எவரும்   சந்தேகம் கொள்ள வேண்டாம் . இம்முறை  ஜனாதிபதி தேர்தலில் நானே   ஐக்கிய தேசிய கட்சியின் வேட்பாளராக    போட்டியிடுவேன். பலமான  ஒரு  தலைமைத்துவத்தினையும் அதனை மையப்படுத்தி சிறந்த அரசியல்  நிர்வாகத்தையும் நிச்சயம் பெற்றுக் கொடுப்பேன்.  என   அமைச்சர்  சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.

 மாத்தறை நகரில் இன்று  வெள்ளிக்கிழமை இடம் பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

 முன்னாள் ஜனாதிபதி   பிரேமதாஸ  ரணசிங்க  மக்களுடன் மக்களாகவே வாழ்ந்து    மக்களுக்காக உயிர் தியாகம் செய்தார். அந்நிலையில் இருந்து ஒருபோதும் பின்வாங்க மாட்டேன்.அரச சுகபோகங்களை துறந்து மக்களுக்களுக்கு முழுமையாக சேவையாற்றுவேன்.   ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக  நானே   களமிறங்குவேன் நாட்டு மக்கள் அதில் எவ்வித சந்தேகமும் கொள்ள வேண்டாம் என்றார்.