(ஆர்.விதுஷா) 

சிறைக்கைதிகளின் ஆற்றல்களை வெளிக்கொண்டு வரும் வகையில்  சிறைச்சாலைகள் திணைக்களம்  ஏற்பாடு  செய்கின்ற  'லலித  சிறசற' என்னும் நிகழ்வு எதிர்வரும்  செப்டம்பர்  மாதம்  8 ஆம் திகதி   கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு  மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.   

Image result for இசை நிகழ்வு]

இந் நிகழ்வு  தொடர்பில் அறியத்தரும் வகையிலான விசேட  ஊடகவியலாளர்  சந்திப்பு  இன்று  வெள்ளிக்கிழமை   வெலிகக்கடை   சிறைச்சாலை வளாகத்தில் உள்ள  பயிற்சிப்பாடசலையின்  விரிவுரை மண்டபத்தில்    இடம்  பெற்றது.   

இதன்  போது  கருத்துத் தெரிவித்த   சிறைச்சாலைகள்  பணிப்பாளர்  நாயகம்  டி.எம்.ஜே.தென்னக்கோன் கூறியதாவது,  

 இந்த நிகழ்வை  ஏற்பாடு  செய்து  நடத்துவதற்கான  அனைத்து நடவடிக்கைகளையும்  வெலிக்கடை சிறைச்சாலையின்   புனர்வாழ்வு  மற்றும்  ஆற்றல்கள் அபிவிருத்தி  பணிப்பாளர் நாயகம்   சந்தன  ஏகநாயக்க  மேற்கொண்டுள்ளார்.  

சிறைக் கைதிகள் உட்பட  பலரது  இ  கடின  முயற்சியின் காரணமாக  இந்த  நிகழ்வு   செப்டம்பர்  மாதம்  08  ஆம்  திகதி  மாலை  6.30  மணியளவில்  பண்டாரநாயக்க    ஞாபகார்த்த  சர்வதேச  மாநாட்டு  மண்டபத்தில்  இடம்  பெறவுள்ளது.