(எம்.மனோசித்ரா)

இனங்களுக்கிடையில் நம்பிக்கையின்மை ஏற்பட்டால் நாடு முன்னேற்றப் பாதையில் பயணிக்க முடியாது என. ஐக்கிய நாடுகள் சபை ஒருங்கிணைப்பாளருடன் இடம்பெற்ற சந்திப்பின் போது எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ  இவ்வாறு தெரிவித்திருக்கிறார். 

மத சுதந்திரம் மற்றும் நம்பிக்கை தொடர்பான ஐக்கிய நாடுகள் சபையின் ஒருங்கிணைப்பாளர் அஹகமட் ஷகீட் இன்று  வெள்ளிக்கிழமை பாராளுமன்ற கட்டட தொகுதியில் உள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்திருந்தார். 

இதன் போது கருத்து தெரிவித்த அஹமட் இலங்கையில் இனங்களுக்கிடையில் மதம் தொடர்பில் சிறந்த நல்லிணக்கம் காணப்படுவதாகத் தெரிவித்தார். 

ஆசியாவில் ஏனைய நாடுகளுடன் ஒப்பிடும் போது இலங்கையில் மதம் தொடர்பில் கற்பதற்காக அனைத்து மதங்களுக்கும் சுதந்திரம் காணப்படுவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.