(எம்.எம்.சில்வெஸ்டர்)

இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதும் மூவகை கிரிக்கெட் தொடரில் சர்வதேச ஒருநாள் தொடர் மற்றும் சர்வதேச இருபது 20 தொடருக்காக இலங்கை அணி பாகிஸ்தானில் விளையாடும் என இலங்‍கை கிரிக்கெட்  நிறுவன ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அந்த ஊடக அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,

3 போட்டிகள் கொண்ட சர்வதேச ஒருநாள் தொடர் செப்டெம்பர் 27,29 மற்றும் ஒக்டோபர் 02 ல் கராச்சியில் இடம்  பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

3 போட்டிகள் கொண்ட சர்வதேச இருபதுக்கு 20 தொடர் லாஹூரி ஒக்டோபர் 05,07 மறறும் 9 ஆம் திகதிகளில்  நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும், டெஸ் போட்டித் தொடர் பொதுவான மைதானத்தில்  டிசம்பர் மாதம்  நடத்தப்படவுள்ளது.

எவ்வாறாயினும், இலங்கை அணி கிரிக்கெட் அணி வீரர்களது பாதுகாப்பு எமக்கு முக்கியமாகும். ஆகவே, பாதுகாப்பு  விடயத்தில் ஏதும் சந்தேகங்கள ஏற்படின் பாகிஸ்தானுக்கான கிரிக்கெட் விஜயத்தை நிறுத்திக்கொள்வோம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.