(செ.தேன்மொழி)

வத்தளை பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் இருவரை அடையாளம் காணுவதற்காக பொது மக்களின் உதவியை வழங்குமாறு குறிப்பிட்டு, சந்தேக நபர்கள் தொடர்பில் தகவலை வழங்குவதற்காக தொலைப்பேசி இலக்கத்தையும் பொலிஸ் தலைமையகம் வெளியிட்டுள்ளது.

கடந்த ஜனவரி மாதம் 13 ஆம் திகதி வத்தளை  - ஸ்ரீ சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு முன்னாள் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் இருவர் கொலைச் செய்யப்பட்டனர். 

இந்த சதி சம்பவம் தொடர்பில் திட்டமிட்டதாக விசாரணைகளின் போது தெரியவந்துள்ள நபர்ககளையே பொலிஸார் அடையாளம் காண பொது மக்களின் உதவியை கேட்டுள்ளனர்.

கொழும்பு - 13 - ஜம்பட்டா வீதியைச் சேர்ந்த பாலச்சந்திரன் புஷ்பராஜா எனப்படும் புகுடிகன்னா  மற்றும் வவுனியா பகுதியைச் சேர்ந்த பும்மா , ராஜூ மற்றும் விஜேந்திரன் என அழைக்கப்படும் ஸ்டென்லி கெனடி பெர்ணான்டோ ஆகிய சந்தேக நபர்களே இவ்வாறு அடையாளம் காணப்பட உள்ளனர்.

சந்தேக நாபர்கள் இருவரும் கடந்த சில காலங்கலாக கொழும்புக்குள் நடமாடி வருவதாக பொலிஸாரின் விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது. இவர்கள் தொடர்பில் தகவல்கள் கிடைக்கப் பெற்றால் அந்த தகவலை தெரிவிப்பதற்காக பொலிஸார் இரு தொலைப்பேசி இலக்கங்களையும் வெளியிட்டுள்ளனர்.

அதற்கமைய 071 - 8591589 இந்த இலக்கத்தை தொடர்பு கொண்டு களனி பிரிவிற்கு பொறுப்பான அதிகாரியிடமும் , 077-7594258 என்ற இலக்கத்தை தொடர்பு கொண்டு பேலியாகொட குற்றப் புலனாய்வு பிரிவின் நிலைய பொறுப்பதிகாரிக்கும் தகவல் வழங்கமுடியும் எனவும்  பொலிஸ் ஊடகப்பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.