போலி கடவுச்சீட்டை பயன்படுத்தி இலங்கை வழியாக பிரான்ஸிற்கு பயணம் மேற்கொள்ள முயற்சித்த ஈரானிய பெண் ஒருவரும் ஆண் ஒருவரும் கட்டுநாயக்க விமானநிலையத்தில் வைத்து கைது செய்துள்ளனர்.

அத்தோடு குறித்த நபர்களை  நாடு கடத்தவும் நடவடிக்கை எடுத்துள்ளனர். 

துருக்கியின் இஸ்தான்புல் நகரில் இருந்தே 28 வயதுடைய ஈரானிய பெண்ணும் , 18 வயதுடைய ஈரானிய ஆண் ஒருவரும் நேற்று துருக்கியில் இருந்து விமானத்தின் மூலம்  இலங்கை வந்தடைந்தனர்.

தாம் சுற்றுலாப் பயணிகள் என தெரிவித்தே இவர்கள் இலங்கை வந்துள்ளதோடு , இவர்கள் பிரேஞ் காரர்கள் என பொலிஸாரிடம் தெரிவித்துள்ளனர்.

சட்டவிரோத முறையில் போலி கடவுச்சீட்டை பயன்படுத்தி நாட்டில் தங்கும் நோக்கிலேயே இவர்கள் இருந்துள்ளதாகவும் , போலி ஆவணங்கைள அதிகாரிகளிடம் காட்டி தப்பித்துக்கொள்ள திட்டமிட்டுள்ளார்கள் என பொலிஸாரின் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இக் கட்வுச்சீட்டுக்களை அதிகாரிகள் கணினி மூலம் பரிசோதனை செய்தபோது  சந்தேக நபர்கள் இருவரும் இன்டர்போலின் சிவப்பு தரவு பட்டியலில் உள்ளடக்கப்பட்டுள்ளமை தெரிய வந்துள்ளது. 

அதன் பின்னர் இந்த தகவல் உடனடியாக கொழும்பில் உள்ள சர்வதேச பொலிஸ் தகவல் பணியகத்திற்கு அனுப்பப்பட்டதுடன், இவர்கள் பயண்படுத்திய கடவுச் சீட்டுக்கள் போலியானவை என்பதும் தெரியவந்துள்ளது. 

அத்தோடு சட்டவிரோதமாக இவர்கள் நாட்டில் தங்குவதற்கான திட்டம் என் என பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.