ஆளில்லா போர்க் கப்பலை சீனா அறிமுகம் செய்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவலை வெளியிட்டுள்ளது. 

ஜாரி என பெயரிடப்பட்டுள்ள குறித்த ஆளில்லா போர்க் கப்பல் உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த ஆளில்லா போர்க்கப்பல் யுத்தத்தில் ஈடுபடுத்தப்படுவதற்கு ஏற்ற வகையில் தயார்ப்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிகப்படுகின்றது.

குறித்த கப்பலை வான்பாதுகாப்பு, எதிரி நாடுகளின் நீர்மூழ்கி மற்றும் போர்க் கப்பல்களுக்கு எதிரான தாக்குதல் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபடுத்த முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.